UAE-ன் புர்ஜ் கலீஃபா கட்டிடத்துக்கு Tough கொடுக்கவுள்ள சவூதி அரேபியாவின் பிரம்மாண்ட கட்டிடம்.. யம்மாடி இவ்வ்ளோ உயரமா.?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிக உயரமான கட்டிடத்தை கட்டிவருகிறது மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியா.

Advertising
>
Advertising

உலகின் முன்னணி கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் ஒன்று சவூதி அரேபியா. அந்நாட்டின் எதிர்கால நோக்கங்கள் சமீப காலங்களில் மிகத் தெளிவான வரையறைகளை கொண்டுள்ளன. கச்சா எண்ணெயை மட்டுமே நம்பி இருக்காமல், சுற்றுலா துறையை மேம்படுத்த சவூதி இளவரசர் சல்மான் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாகவே பார்க்கப்படுகிறது இந்த ஜித்தா டவர் திட்டம். இதன்மூலம் உலகின் மிக உயரமான கட்டிடத்தை கட்டிமுடிக்கும் பணியில் இறங்கியுள்ளது சவூதி. 

புர்ஜ் கலீஃபா

உலகில் மனிதனால் கட்டப்பட்ட மிக உயரமான கட்டிடமாக தற்போது இருப்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடம் தான். சுற்றுலாவாசிகளின் கவனத்தை ஈர்க்க பல முக்கியமான திட்டங்களை இந்த நூற்றாண்டின் துவக்கத்திலேயே துவக்கி வைத்தார் துபாயின் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்.

இவரது ஆணையின்படி கட்டிமுடிக்கப்பட்டதுதான் இந்த புர்ஜ் கலீஃபா கட்டிடம். உலகின் மிக உயரமான கட்டிடமான இதில் 160 தளங்கள் இருக்கின்றன. உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் மட்டுமே இந்த கட்டிடத்தில் உள்ள பிளாட்களை வாங்க முடியும். செல்வ செழிப்புகளை கொண்டிருக்கும் துபாயின் அசைக்க முடியாத சின்னமாக உயர்ந்து நிற்கிறது 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீஃபா கட்டிடம்.

சவூதியின் பிரம்மாண்ட திட்டம்

இந்நிலையில், சுற்றுலா துறையில் ஈடுபாடுகாட்டிவரும் சவூதி 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் பிரம்மாண்ட மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒருபகுதிதான் இந்த ஜித்தா டவர் ப்ராஜெக்ட். 2013 ஆம் ஆண்டு துவங்கிய இக்கட்டிடத்தின் கட்டுமான பணிகள், துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. 1000 மீட்டர் உயரத்திற்கு இக்கட்டிடம் எழுப்பப்பட உள்ளது.

167 தளங்கள் இந்த கட்டிடத்தில் அமைக்கப்பட உள்ளன. இந்த கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும்போது, உலகின் மிகப்பெரிய கட்டிடம் என்ற பெருமையை ஜித்தா டவர் பெறும். உலக அளவில் கவனத்தை ஈர்க்கவும், சுற்றுலா பயணிகளை கவரவும் இந்தத் திட்டத்தை துவங்கி செயல்படுத்திவருகிறது சவூதி அரேபிய அரசாங்கம்.

JEDDAHTOWER, BURJKHALIFA, SKYSCRAPER, ஜித்தாடவர், புர்ஜ்கலீஃபா, சவூதிஅரேபியா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்