பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 81 கைதிகளுக்கு நேற்று மரண தண்டனையை நிறைவேற்றி இருப்பதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. இது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து சவூதி அரேபிய ஊடக முகமை வெளியிட்டுள்ள செய்தியில்," தண்டனை நிறைவேற்றப்பட்ட அனைவரும் பல கொடூரமான குற்றங்களைச் செய்த குற்றவாளிகள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுள் அல்கொய்தா மற்றும் ஹவுதி போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் அடக்கம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குற்றவாளிகள்
பொதுவாகவே குற்றவாளிகளின் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்படும் சவூதி அரேபியாவில் நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் செய்த குற்றங்களை சவூதி அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,"பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களைக் கொன்றவர்கள், அரசாங்க பணியாளர்கள் மற்றும் முக்கிய பொருளாதார தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியவர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகளை கொன்று அவர்களின் உடல்களை ஊனப்படுத்துதல் மற்றும் போலீஸ் வாகனங்களை குறிவைத்து கண்ணிவெடிகளை புதைத்தல் ஆகிய காரியங்களில் ஈடுபட்டவர்கள், கடத்தல், சித்திரவதை, கற்பழிப்பு, ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை சவூதிக்குள் கடத்தல் ஆகிய காரியங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 81 பேரில் 73 பேர் சவூதி குடிமக்கள், ஏழு பேர் ஏமன் மற்றும் ஒருவர் சிரிய நாட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விசாரணை
குற்றவாளிகள் அனைவரும் சவூதி நீதி மன்றத்தில் 13 நீதிபதிகளை கொண்ட அமர்வில் 3 முறை விசாரணை செய்யப்பட்ட பின்னரே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது என அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.
மேலும், சவூதி தேசிய ஊடகம் அளித்த அறிக்கையில்,"நாட்டின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத சித்தாந்தங்களுக்கு எதிராக சவூதி அரேபியா தொடர்ந்து கண்டிப்பான மற்றும் அசைக்க முடியாத நிலைப்பாட்டை எடுக்கும்" என குறிப்பிடப்பட்டு உள்ளது.
கடைசியாக கடந்த 1980 ஆம் ஆண்டு மெக்கா மசூதியை கைப்பற்றிய 63 போராட்டக்காரர்களுக்கு சவூதி அரேபியா ஒரே நாளில் மரண தண்டனையை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கொரோனா வந்துடுமோ-னு பயம்.. அதுனால தான் அப்படி செஞ்சேன்".. நாடகமாடிய நபருக்கு 38 வருஷம் ஜெயில் தண்டனை கொடுத்த கோர்ட்..!
- #Breaking:அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு: 38 பேருக்கு மரண தண்டனை.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி..!
- யூடியூப் தவறான வீடியோக்களையும் வெளியிடுமா? யூடியூப்பை ஏன் தடை செய்யக்கூடாது..? நீதிபதி சரமாரி கேள்வி..!
- மிஸ்டர் விஜய் மல்லையா இனிமேல் அந்த பங்களால நீங்க இருக்க முடியாது! குடும்பத்தோட வெளியேறிடுங்க.. லண்டன் நீதிமன்றம் அதிரடி
- 'லிவிங் டுகெதர்' ரிலேஷன்ஷிப்ல ஏதாவது 'பிரச்சனை'னா கேஸ் போடலாமா...? - உயர்நீதிமன்றம் அளித்த 'பரபரப்பு' தீர்ப்பு...!
- 'ஒரே வீட்டுல தான் இருந்தோம்'... 'ஆனா தாம்பத்திய உறவு மட்டும் நடக்கல'... 'கோர்ட்டுக்கு போன தம்பதி'... இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்!
- "எனக்கு ஆண்மை இல்லை...!"' சிவசங்கர் பாபா கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்...! - பாலியல் வழக்கில் பரபரப்பு!
- ‘ரெட் லிஸ்ட்டில் இந்தியா உட்பட 13 நாடுகள்’.. இந்த நாடுகளுக்கு போனது தெரிஞ்சா அபராதம்.. அதிரடியாக அறிவித்த நாடு..!
- 'Live-in relationship சரியா?.. தவறா'?.. மிரட்டும் உறவினர்கள்!.. தவிக்கும் தம்பதி!.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- 'வேணும்னே அப்படி சொல்லல...' 'ஆக்சுவலா நான் என்ன சொல்ல வந்தேன்னா...' - முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த மன்சூர் அலிகான்...!