சவூதி அரேபியாவுக்கு அடிச்ச அடுத்த ஜாக்பாட்.. இனி சொர்க்க பூமிதான்.. வெளியான திகைக்க வைக்கும் தகவல்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சவூதி அரேபியாவில் தங்கம் மற்றும் காப்பர் தாதுக்கள் இருக்கும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இது அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்களிப்பாக அமையும் என்கிறார்கள் அந்நாட்டு நிபுணர்கள்.
சவூதி அரேபியா
எண்ணெய் வளம் மிக்க பிரதேசங்களில் முக்கியமானது சவூதி அரேபியா. மத்திய கிழக்கு நாடான சவூதி முழுவதும் பாலைவனம் தான் என்றாலும் அதனை சோலைவனமாக மாற்ற அந்நாட்டு அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு இளவரசர் சல்மான் இதற்காக முக்கிய திட்டங்களை அறிவித்து வருகிறார். விஷன் 2030 எனும் திட்டத்தின் அடிப்படையில் சவூதியை மேம்படுத்த புதிய திட்டங்கள் அங்கே முன்னெடுப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சவூதி அரேபியாவிற்கு தற்போது மிகப்பெரிய ஜாக்பாட் அடித்திருக்கிறது.
தங்க தாதுக்கள்
இஸ்லாமியர்களின் புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படும் மதீனாவில் தங்க மற்றும் காப்பர் தாதுக்கள் இருக்கும் இடங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. மதீனா பகுதியில் உள்ள அபா அல்-ரஹா எல்லைக்குள் தங்க தாது கண்டுபிடிக்கப்பட்டதாக சவுதி புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல, மதீனாவில் உள்ள வாடி அல்-ஃபரா பகுதியில் உள்ள அல்-மாடிக் பகுதியில் நான்கு இடங்களில் செப்பு தாது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த கண்டுபிடிப்புகளின் மூலமாக புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் திறந்திருப்பதாக சவுதி புவியியல் ஆய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதன்மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கலாம் எனவும் சவூதி அரசு திட்டமிட்டிருக்கிறது. மேலும், சவூதியின் பொருளாதார வளர்ச்சியிலும் இந்த புதிய கண்டுபிடிப்புகளின் தாக்கம் அதிகம் இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
முதலீடு
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தளத்தில் $533 மில்லியன் முதலீடு எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் சுமார் 4,000 வேலைகளை உருவாக்கும் என்றும் அதிகாரிகள் நம்புகின்றனர். சவூதி அரேபியாவில் 5,300 க்கும் மேற்பட்ட கனிம இடங்கள் உள்ளன என்று சவூதி புவியியலாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பேராசிரியர் அப்துல்அஜிஸ் பின் லாபன் ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார். இதில் பல்வேறு உலோகம் மற்றும் உலோகம் அல்லாத பாறைகள், கட்டுமானப் பொருட்கள், அலங்கார பாறைகள் மற்றும் ரத்தினக் கற்கள் அடங்கும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மரம் நடலாம்னு குழி தோண்ட போனவருக்கு காத்திருந்த ஷாக்.. போட்டோவை இணையத்துல ஷேர் பண்ணப்போ தான் உண்மையே தெரியவந்திருக்கு..!
- "ஆத்தாடி ஆத்தா".. டைனோசருக்கு முன்பே வாழ்ந்த மீன்.. உடைந்த 38 கோடி ஆண்டு ரகசியம்.. "மனிதர்கள் கூடயும் ஒரு இப்படி ஒரு தொடர்பு இருக்காமே!!"
- "34 வருஷம் சிறை".. லீவுக்கு வீட்டுக்குப்போன சவூதி மாணவிக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை.. உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.!
- சவூதி இளவரசருக்கு சொந்தமான உலகின் காஸ்ட்லியான வீடு... பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்.. விலையை கேட்டா தான் பகீர்னு இருக்கு..!
- எல்லாரும் கட்டுக்கதைன்னு நினைச்சாங்க.. 650 வருஷத்துக்கு முன்னாடி கடலுக்குள் மூழ்கிப்போன பிரம்மாண்ட நகரம்.. தானாகவே மேலே வந்த அதிசயம்?..!
- மெக்காவின் அதிசய கிணறு.. 1000 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் மர்மம்.. அறிவியலை மிஞ்சிய ஜம் ஜம் தண்ணீர்..!
- 30 வருஷமா Toilet-லயா சமோசா ரெடி பண்ணீங்க?. ஹோட்டலில் நடந்த திடீர் ரெய்டு.. ஆடிப்போன அதிகாரிகள்..!
- கொரோனாவை செயலிழக்க செய்யும் புதிய வகை மாஸ்க்.. ஒரு லேயரில் தாமிர நானோ துகள்கள்.. விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு
- அபுதாபியில் நடந்த டிரோன் தாக்குதல்.. உடனே திருப்பி அடிக்கணும்... ஒரு சில மணி நேரங்களில் சவுதி கூட்டுப்படைகள் செய்த காரியம்!
- 'இது கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்ல...' 'ரொம்ப தப்பான வழியில போய்கிட்டு இருக்கு...' இப்போ 'அவங்க' பண்ண வேண்டியது 'அது' மட்டும் தான்...! - சவுதி அமைச்சர் கருத்து...!