‘பெண்களும் கார் ஓட்ட முடியும்’!.. ஆணாதிக்கத்தை எதிர்த்து உரிமைகள் பெற்றுத்தந்த இளம் ‘போராளிக்கு’ நேர்ந்த கொடுமை.. சவுதி அரசின் திடீர் நடவடிக்கைக்கு வலுக்கும் கண்டனம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டும் உரிமைக்காக போராடியவரும், சமூக ஆர்வலருமான லூஜெய்ன் அல்-ஹத்லூலிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியா வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலரான லூஜெய்ன் அல்-ஹத்லூல் (Loujain al-Hathloul) பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கடந்த 2018 மே மாதம் கைது செய்யப்பட்டார்.
ரியாத்தின் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்திற்கு (சிறப்பு குற்றவியல் நீதிமன்றம்) மாற்றப்பட்டது. அந்நீதிமன்றத்தில் ஹத்லூலிக்கு 5 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து தெரிவித்த லூஜெய்ன் அல்-ஹத்லூலின் சகோதரி லீனா, ‘என் சகோதரி பயங்கரவாதி அல்ல, அவர் ஒரு செயற்பாட்டாளர்’ என தெரிவித்தார். முன்னதாக ஹத்லூலிக்கு 5 ஆண்டுகள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டபோது அவர் அழுததாகவும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என கூறியதாகவும் லீனா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 30 நாட்களுக்குள் சிறை தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யலாம் என்றும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் எந்த குற்ற செயலிலும் ஈடுபடாமல் இருந்தால், அவரது தண்டனையை 2 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்களாக குறைக்க முடியும் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பெண்கள் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது, ஹத்லூல் உள்ளூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சவூதியில் பெண்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் வரலாற்று தீர்ப்பை சவுதி நீதிமன்றம் வழங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஹத்லூல் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: எங்கள அடிக்குறாங்கய்யா...! 'காப்பாத்துங்க...' 'சவூதியில் கதறி அழும் தமிழக இளைஞர்...' உள்ளத்தை நொறுங்க செய்யும் வீடியோ...!
- 'ஃபேக்டரி கார் பார்க்கிங்கில்... இளைஞர்கள் செய்த வேலை!'.. 'அதிர்ச்சி' அடைந்து அறிவுரை சொன்ன ஊழியருக்கு நேர்ந்த சோகம்!.. பரபரப்பு தீர்ப்பு!
- பாகிஸ்தானுடன் உறவு முறிகிறதா...? 'எண்ணெய் சப்ளை-யை ஸ்டாப் பண்ணிய சவுதி...' - இனிமேல் கடனும் கொடுக்க மாட்டோம்...!
- 'பேஸ்புக்கில் அரை நிர்வாண வீடியோ'... 'அருகில் இருந்த குழந்தைகள்'... 'ஃபாத்திமா செய்தது என்ன'? ... பின்னணி தகவல்கள்!
- செல்வச் செழிப்பில் மிதந்த... கோடீஸ்வர நாட்டுக்கு இப்படியொரு நிலையா!? அதலபாதாளத்தில் விழுந்த பொருளாதாரம்!.. அடிப்படை வரியே 3 மடங்கு உயர்வு!
- 'எனக்கு இருமுடி கட்டி சபரிமலை போணும்'...'ரெஹானா' அதிரடி'.. பரபரப்பு பதிலளித்த கேரள காவல்துறை!
- ‘உளவு பார்க்கப்பட்ட இந்தியர்களின் வாட்ஸ்அப் பயன்பாடு’.. ‘விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ்’..
- பேருந்தும் லாரியும் ‘நேருக்கு நேர்’ மோதி கோர விபத்து.. ‘நொடியில் தீப்பிடித்ததால்’.. வெளியேற முடியாமல் ‘35 பேர் பலி’..
- 'நீங்களாம் எப்படி இளைஞர்கள் கிட்ட வர்றீங்க?'.. 'என்னா தைரியம் இருக்கணும்?' விளாசிய சிறுமிக்கு ‘விருது’ ரெடி!
- ‘சிங்கம்’ பட பாணியில் குற்றவாளியை பிடித்த பெண் ஐபிஎஸ்..! குவியும் பாராட்டுக்கள்..!