அட.. இவ்வளவு பக்கத்துலயே இருந்திருக்கு.. மனிதர்கள் வசிக்க உகந்த கிரங்கங்களின் தேடல்.. புதிய அத்தியாயத்தை எழுத துவங்கும் ஆராய்ச்சியாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சனி கிரகத்தின் துணைக்கோள் என்செலடஸ்-ல் மனிதர்கள் உயிர்வாழ தேவையான வேதிப்பொருள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். இது விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

Advertising
>
Advertising

Also Read | விண்வெளியில் இன்னும் 3 நாள்ல நாசா செய்ய இருக்கும் சம்பவம்.. வரலாற்றுலயே இதான் ஃபர்ஸ்ட் டைம்.. Live ஆ பாக்கலாமாம்..!

மனித குலம் ஆரம்ப காலத்தில் இருந்தே விண்வெளி குறித்து ஆராய்ந்து வந்திருக்கிறது. துவக்கத்தில் மர்மமாக இருந்த பல விஷயங்கள் தற்போது, அறிவியலின் துணையோடு புலப்பட்டிருக்கின்றன. அவற்றுள் இன்னும் சில கேள்விகள் கேள்விகளாகவே எஞ்சுகிறது. அப்படியானவற்றுள் ஒன்றுதான் மனிதர்கள் வசிக்க ஏதுவான இன்னொரு கிரகத்தை கண்டுபிடிப்பது. இதற்காக பல உலக நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. அப்படியான ஆராய்ச்சி ஒன்றின் மூலமாக தற்போது கிடைத்திருக்கும் தகவல் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

என்செலடஸ்

சூரிய குடும்பத்தில் ஆறாவது கோளாக இருக்கிறது சனி கிரகம். இதனை சுற்றி வரும் என்செலடஸ் என்னும் துணைக்கோள் மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலையை கொண்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்பி வந்தனர் இந்நிலையில் இதனை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது, இந்த கோளில் பாஸ்பரஸ் இருப்பது ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வுக்கட்டுரை Proceedings of the National Academy of Sciences (PNAS) எனும் இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பேசிய இந்த ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியரும் வேற்று கிரக கடல்சார் ஆராய்ச்சி நிபுணருமான கிறிஸ்டோபர் க்ளீன்,"என்செலடஸ் என்பது நமது சூரிய மண்டலத்தில் மனிதகுலத்தின் வாழ்க்கையைத் தேடுவதில் முதன்மையான இலக்குகளில் ஒன்றாகும். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய கேசினி விண்கலம் திரட்டிய தரவுகள் இன்னும் பல ஆச்சர்யங்களை எங்களுக்கு அளித்து வருகிறது" என்றார்.

பாஸ்பரஸ்

   நாசாவின் கேசினி விண்கலம் என்செலடஸில் உள்ள மேற்பரப்பு திரவ நீரை கண்டுபிடித்தது. மேலும், இந்த கோளில் உள்ள உறை பனிக்கட்டி வெடிப்பில் இருந்து உருவான நீராவியையும் பகுப்பாய்வு செய்தது. இந்த ஆராய்ச்சியின்மூலம் கோளில் மனிதர்கள் உயிர்வாழ தேவையான பாஸ்பரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் பனி மூடிய பகுதிக்கு அடியே இருக்கும் கடலில் அது அதிகளவில் இருக்கலாம் எனவும் கிளீன் தெரிவித்திருக்கிறார். மேலும், இது தொடர்பான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், வேற்றுகிரகத்தில் மனித வாழ்க்கை சாத்தியமா? என்ற கேள்விக்கு விடையாக இந்த ஆய்வுகள் அமையலாம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Also Read | இங்கிலாந்து அரசருக்கு சொந்தமான ரகசிய தீவில் இருக்கும் சொகுசு வீடு.. கடலுக்கு நடுவுல இவ்வளவு வசதிகளா.. சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்..!

SATURN, MOON, ENCELADUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்