ஒரு பக்கம் பேச்சுவார்த்தைன்னு சொல்லிட்டு.. சைலண்டா ரஷ்யா செய்யும் வேலை.. அதிர்ச்சியை ஏற்படுத்திய செயற்கைக்கோள் போட்டோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் எல்லை அருகே ஹெலிகாப்டர்கள் மற்றும் லட்சக்ணக்கான படைகளை ரஷ்யா குவித்துள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

புருஷன் போலீசில் சிக்கிட்டா நாம ஜாலியா இருக்கலாம்.. பெண் போட்ட மாஸ்டர் பிளான்.. சிக்கியது எப்படி?

கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழலில் பெலாரஸின் கோமெல் நகரில் ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதனிடையே சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் அரசு புகார் மனுவையும் அளித்துள்ளது.

ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டிருப்பதாக உக்ரைன் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. ஆனாலும் எந்த இடத்தில், எப்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை. இந்த சூழலில் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை கையாளும் படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அந்தநாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், ரஷ்ய போர் வாகனங்கள் பல கிலோமீட்டர் தொலைவுக்கு அணி வகுத்து நிற்கும் செயற்கைகோள் படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kyiv நகரில் இருந்து சுமார் 64 கிலோமீட்டர் தொலைவுக்கு டாங்கிகள் உள்ளிட்ட படைகள் நீண்ட வரிசையில் காணப்படுவதாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் கூறியுள்ளது.

சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு ரஷ்ய ராணுவ வாகனங்கள் நிற்பது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. Ivankiv நகரத்தின் கிழக்கே எரிபொருள் தளவாடங்கள், டாங்கிகள், காலாட்படை போர் வாகனங்கள், சுயமாக இயக்கப்படும் பீரங்கி உள்ளிட்ட கவச வாகனங்கள் இருப்பதாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

10 நாளுக்கு முன்னாடி மகள்.. இப்போ அப்பா.. அடுத்தடுத்து நடந்த துயரம்.. மனம் தளராத கிரிக்கெட் வீரரின் அர்ப்பணிப்பு

UKRAINE, UKRAINE BORDER, SATELLITE IMAGES, RUSSIA, உக்ரைன், ரஷ்ய போர் வாகனங்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்