பதபதைக்க வைக்கும் சாட்டிலைட் போட்டோ.. என்ன நடக்கிறது உக்ரைனில்? பேரதிர்ச்சியில் உலக மக்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன்: உக்ரைனின் என்ன நடக்கிறது என்பதனை காட்டும் செயற்கைக்கோள் படம் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

உலகின் மிக பெரிய நாடாக இருந்த சோவியத் யூனியன் 1991-ஆம் ஆண்டு பல சிறு நாடுகளாக பிரிந்தது. சோவியத் யூனியனின் மிக பெரிய பகுதி ரஷ்யாவாக உருவெடுத்தது. அதோடு உக்ரைன், கஜகிஸ்தான் என பல சிறு நாடுகளும் சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்டது.

தன் நாட்டிற்கு ஆபத்து:

சுதந்திர நாடானாலும் அவை அனைத்தும் ரஷ்யாவிற்கு ஆதாரவாகவே செயல்பட்டன. தற்போது சோவியத் யூனியன் பிரிய காரணமாக இருந்த நேட்டோ படைகளோடு உக்ரைன் சேர நினைத்த நிலையில், அது தன் நாட்டிற்கு ஆபத்து என கருதிய ரஷ்யா உக்ரைனின் மேல் போர் தொடுத்துள்ளது.

அதோடு, கடந்த 2014-ஆம் ஆண்டின்போது, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றிய போது இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது ரஷ்ய அதிபர் புட்டின் உக்ரைன் மீது போர் தொடுக்க முடிவு செய்தது. இதன் காரணமாக உக்ரைனில் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டது.

போர்:

உக்ரைனுக்கு நேட்டோ படைகளும், அமெரிக்காவும் சப்போர்ட்டாக உள்ளது. ரஷ்யாவிற்கு பாகிஸ்தான் சீனா இலங்கை ஆப்கானிஸ்தான் என அத்தனை அண்டை நாடுகளும் ஆதரவாக உள்ளது. இதில் இந்தியா வெளிப்படையான நிலைப்பாடு எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

137 பேர் மரணம்:

தற்போது உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்கத் தொடங்கியுள்ளதாகவும்,  உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு போட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. போரின் முதன் நாளான நேற்று மட்டும் 137 பேர் மரணமடைந்துள்ளதாக உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.

கடும் கண்டனம்:

உச்சக்கட்ட பதற்ற நிலையில் உக்ரைன் நாடு உள்ளது. அதோடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்யாவின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது என அதிபர் புடின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

செயற்கைக்கோள் படம்:

நாட்டின் கிழக்கில் உள்ள இந்த விமான தளத்தில் இருந்து புகை மேலே எழும்புவதை பிளானட் லேப்ஸின் செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. உக்ரைனை சுற்றியுள்ள விமானப்படை தளங்கள் மற்றும் பிற இராணுவ தளங்களையும் தங்கள் கட்டுபாட்டுக்குள் மிக வேகமாக கொண்டு வருகிறது..

SATELLITE, UKRAINE, SUKHOV, AIR BASE, செயற்கைக்கோள் படம், உக்ரைன், ரஷ்யா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்