“கொரோனா அப்டிக்கா போகட்டும்.. நாம இப்படிக்கா போவோம்!”.. “ட்ரெண்டிங்கில் சாரி சேலஞ்ஜ்!”.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சாரி சேலஞ்ஜ் என்கிற புடவை கட்டும் நிகழ்வு ட்ரெண்டிங்கில் இருக்க, ஆங்காங்கே பெண்கள் புடவை அணிந்துகொண்டு, ட்விட்டரில் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதில் கொரோனா சக்கை போடு போடுவதாக அறியப்படும் அமெரிக்காவில் பெண்கள் இதுபோல் சமூக இடைவெளியைக் கடைபிடித்தபடி தத்தம் வீட்டு வாசல்களில் நின்றபடி விதவிதமான புடவைகள் அணிந்தபடி போஸ் கொடுத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனாவால் சமூக இடைவெளி, சமூக விலகல், ஊரடங்கு உத்தரவு முதலானவை கடைபிடிக்கப்பட்டுக் கொண்டு வர, இந்நேரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய பெண்கள் தத்தம் வீட்டு வாசலின் முன்பு ஒரு தெரு முழுக்க பெண்கள் நின்றுகொண்டு போஸ் கொடுக்கும்

வீடியோ பாலராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோக்களும், இன்னும் பல புகைப்படங்களும் சாரி சேலஞ்ஜ் என்கிற ஹேஷ் டேகில் ட்ரெண்டாகி வருகின்றன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்