வலி, 'மூச்சுத்திணறல்'னு எதுவும் இருக்காது...! 'வெறும் 30 செகண்ட் தான்...' -'கருணைக்கொலை' மெஷினை உருவாக்கியுள்ள நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்சுவிஸ் நாட்டில் கருணைக்கொலைக்கு பயன்படுத்தப்படும் “சர்க்கோ தற்கொலை இயந்திரம்' தனது சட்டப்பூர்வ மதிப்பாய்வை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
மேலும், வரும் 2022-ம் ஆண்டு முதல் நாட்டில் செயல்படத் தயாராக இருக்கும் என்று அதன் உருவாக்கியவர்கள் கூறியுள்ளனர்.
ஐரோப்பிய நாட்டில் கருணைக்கொலை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணைக்கொலைக்கு விண்ணப்பித்து உள்ளனர். சோடியம் பென்டோபார்பிட்டலின் திரவத்தை உட்கொள்ளுவதன் மூலம் அவர்கள் வாழ்வை முடித்துக் கொண்டனர்.
ஆனால், இந்த இயந்திரம் நோயாளிகளை அவர்கள் இறப்பதற்கு முன் ஆழ்ந்த கோமா நிலைக்குத் தள்ளும். “சர்க்கோ தற்கொலை பாட்” நைட்ரஜனால் நிரப்பப்படுவதன் மூலம் கோமாவிற்கு தள்ளுகிறது.
இதன் மூலமாக ஆக்ஸிஜன் அளவை விரைவாகக் குறைத்து, ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா மூலம் உள்ளே இருக்கும் நபரைக் கொல்லும். இது எந்த மருந்தும் இல்லாமல் ஒரு விரைவான மற்றும் அமைதியான மரணம் என்றும் கூறப்பப்பட்டுள்ளது.
கருணை கொலைக்கு உள்ளாகும் நபர் சுயநினைவை இழப்பதற்கு முன்பு சிறிது மகிழ்ச்சியை உணரலாம் இந்த முறையின் மூலம் முப்பது வினாடிகளில் மரணம் ஏற்படும் என்றும், எந்த பீதியும் இல்லை, மூச்சுத் திணறலும் இல்லை என, இதனை உருவாக்கியுள்ள நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.
இந்த இயந்திரம் உள்ளே இருந்தும் இயக்கும் விதமாக பொத்தான்கள் வைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது,
கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த தொழில்நுட்பத்தின் சட்டப்பூர்வ மறுஆய்வு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 3D பரிமாணத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கருணைக்கொலை மெஷின் 2022-இல் சுவிட்சர்லந்து நாட்டில் செயல்பட தயாராக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்