"இந்தியாவுக்கு ரொம்ப நன்றி.. ஆரம்பத்துல இருந்தே நெறய ஹெல்ப் செஞ்சாங்க".. முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கையை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான சனத் ஜெயசூரியா இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கை, கடந்த 70 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது. இதனிடையே செலவுகளை கட்டுப்படுத்தவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.

ஆனாலும், சிக்கல் தீர்ந்தபாடில்லை. இதனையடுத்து அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இலங்கை முழுவதும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு மக்கள் கையில் கேன்களுடன் வரிசையில் நின்று வருகின்றனர். இது போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது.

இந்தியா உதவி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி துவங்கிய காலத்தில் இருந்தே இந்தியா பல்வேறு உதவிகளை செய்துவந்தது. எரிபொருள், மருத்துவ உபரணங்கள், மருந்துகள், உணவுப் பொருட்கள் என இந்தியா இலங்கைக்கு அனுப்பியது. மேலும், இலங்கையில் அமைய உள்ள புதிய அரசுக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவியாக வழங்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அறிவித்திருக்கிறது. இதனை இலங்கையை சேர்ந்த மக்கள் பலரும் வரவேற்றிருக்கிறார்கள்.

நன்றி

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூரியா நேற்று அதிபருக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். மேலும், இதுகுறித்து பேசிய அவர்," இலங்கையில் நிலையான அரசு அமைந்த உடன் உலக வங்கி, இந்தியா மற்றும் நட்பு நாடுகள் இலங்கைக்கு உதவ வேண்டும். நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்து இந்தியா மிகவும் உதவியாக இருந்து வருகிறது. நிவாரண பொருட்களை அனுப்பி பல்வேறு உதவிகளை இந்தியா முன்னெடுத்திருக்கிறது. நாங்கள் இந்தியாவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்" என்றார்.

 

SRILANKA, JEYSURIYA, CRICKET, இலங்கை, போராட்டம், ஜெயசூரியா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்