உலகளவில் பிரபலமான “சாத்தானின் வேதங்கள்” - கத்திக்குத்து வாங்கிய எழுத்தாளர்.. யார் இந்த சல்மான் ருஷ்டி.?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்தவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லீம் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கடந்த 20 ஆண்டுகளாகவே, சல்மான் ருஷ்டி,  இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2016-ம் ஆண்டு அமெரிக்க குடியுரிமையும் பெற்று வசித்து வருகிறார்.

Advertising
>
Advertising

இவர் எழுதிய “சாத்தானின் வேதங்கள் (satanic verses)” என்கிற புத்தகம் உலகளவில் மிகவும் பிரபலம். இதன் மூலம் இவரும் உலக புகழ் எழுத்தாளராக உருவெடுத்தார். அதேநேரம், உலக அரங்கில் இவரது புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்குக் காரணம், இப்புத்தகம் இஸ்லாமியர்களின் நம்பிக்கைகள் குறித்த இப்புத்தகத்தின் பதிவுகள் என்று கூறப்படுகிறது.  இதனால், ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் சல்மான் ருஷ்டிக்கு ‘பட்வா’ என சொல்லப்படும் மரண தண்டனையை அறிவித்தது.

இந்நிலையில்தான், சல்மான் ருஷ்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றிருந்தபோது, ஒரு மர்ம நபர் மேடை ஏறி வந்து அவரை சரமாரியாக கத்தியால் குத்த,  இதில், ரத்த மயங்கிச் சரிந்த சல்மான் ருஷ்டி,  சிகிச்சை பெற்று வந்தார். தற்போது வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து விழிப்பு நிலைக்கு வந்த அவரால் நன்றாக பேச முடிவாதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனாலும், அவரது கல்லீரல் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் அவரது பார்வை பறிபோகும் அபாயம் இருப்பதாகவும், சல்மான் ருஷ்டியின் உதவியாளர் ஆண்ட்ரூ வெய்லி தெரிவித்திருக்கிறார். சல்மான் ருஷ்டி மீதான இந்த தாக்குதலுக்கு பிரிட்டன் முன்னாள் அதிபர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்களும், ஜே.கே.ரவுலிங் உள்ளிட்ட எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SALMAN RUSHDIE, SALMAN RUSHDIE HEALTH, SALMAN RUSHDIE STABBED, JK ROWLING, SATANIC VERSES

மற்ற செய்திகள்