தலைக்கேறிய போதை.. “17 வயது இளைஞனைக் கொன்று”... அந்த தலையை வைத்து பந்தடித்து விளையாண்ட கொலையாளி.. தற்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அவுஸ்திரேலியாவில் ஒரு இளைஞரைக் கொன்று அவரது தலையை வைத்து, கால்பந்தாடிய நபர் ஒருவர் பிரிட்டனில் சொகுசாக வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் மோர்கன் ஜே ஷெப்பர்டு என்கிற 17 வயது இளைஞனுடன் ஜேம்ஸ் பட்ரிக் ரோகன் என்பவரும், கிறிஸ்டோபர் கிளார்க் ஜோன்ஸ் என்கிற 36 வயதுடைய ஒருவரும் தங்கி இருந்துள்ளனர்.

ஆனால் குடிபோதையில் நடந்த வாக்குவாதம் ஒன்றின்போது மோர்கனை மற்ற இருவரும் கத்தியால் குத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், மேலும் 133 முறை கத்தியால் குத்தி அந்த இளைஞர்கள் மோர்கனைக் கொன்றதோடு, மோர்கனின் தலையை வெட்டி எடுத்து பந்தாடியுள்ளனர். பப்பெட்டாகவும் பயன்படுத்தியுள்ளனர். 

அவுஸ்திரேலியாவை அதிரவைத்த இந்த கொலை சம்பவத்தில் ஜோன்ஸ் உயிரிழக்க வேண்டும் என்று முதலில் மக்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் ஜோன்ஸ்க்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. இந்நிலையில் அவர் தற்போது மக்கள் வரிப்பணத்தில் சொகுசு ஹோட்டல் ஒன்றில் ராஜவாழ்க்கை வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தாலும், ஜோன்ஸ் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறாத காரணத்தாலும், அவர் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்பதாலும் அவர் பிரிட்டனுக்கு நாடு கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்