உக்ரைன் மேயரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டு ரஷ்யா வச்ச டிமாண்ட்..முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மேயர் ஒருவரை ஒருவார காலத்திற்கு பிறகு விடுத்துள்ளது ரஷ்ய ராணுவம்.

Advertising
>
Advertising

இனி பாஸ்வேர்டு ஷேர் பண்ணா வேலைக்கு ஆகாது .. பிரபல ஓடிடியில் வரப்போகும் புதிய திட்டம்.?

ரஷ்யா- உக்ரைன் போர்

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்நிலையில், இன்று 22 ஆம் நாளாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களான தலைநகர் கிவ், கார்கிவ், மரியுபோலில் ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் காரணமாக சுமார் 30 லட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த்துள்ளனர்.

சிறை பிடிக்கப்பட்ட மேயர்

இந்நிலையில் உக்ரைனின் மெலிட்டோ போல் நகர மேயரான இவான் ஃபேதுரோ-வை கடந்த வாரம் ரஷிய படையினர் கடத்திச் சென்றனர். இதனை கடுமையாக விமர்சித்த உக்ரைன்," ரஷ்ய படைகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததால் இவான் கடத்தப்பட்டிருக்கிறார்" எனத் தெரிவித்து வந்தது.

உக்ரைன் மேயரை ரஷ்ய படையினர் சிறை பிடித்த விஷயம் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இவானை ரஷ்யா விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை வைத்திருந்தன.

விடுவிப்பு

மேயர் இவான் ஃபேதுரோவை விடுவிக்க வேண்டுமானால், உக்ரைன் பிடித்து வைத்துள்ள ரஷ்ய வீரர்களை விடுவிக்க வேண்டும் என ரஷ்யா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிகிறது. அதன் பின்னர், உக்ரைன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 9 இளம் ரஷ்ய வீரர்களை உக்ரைன் அரசு விடுத்தது. இதனை அடுத்து இவான் ஃபேதுரோவை ரஷ்ய ராணுவம் இன்று விடுத்திருக்கிறது.

குழந்தைகள்

இந்த சம்பவம் குறித்துப் பேசிய உக்ரைன் அதிபர் வோலோடிமர் ஜெலன்ஸ்கி," ரஷ்ய ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட உக்ரைன் மேயர் இவான் ஃபேதுரோ விடுக்கப்பட்டுள்ளார். அதற்குப் பதிலாக 9 ரஷ்ய வீரர்களை விடுவித்திருக்கிறோம். இந்த வீரர்கள் 2002, 2003 ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்கள். உண்மையில் இவர்கள் குழந்தைகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பயிற்சிக்காக ராணுவத்தில் சேர்ந்த வீரர்களை உக்ரைனுக்கு போர் புரிய ரஷ்யா அனுப்பி உள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியிருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உக்ரைன் பாதுகாப்பு படை வீரர்களால் சிறை பிடிக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள்," பயிற்சி என்று சொல்லித்தான் எங்களை அனுப்பினார்கள். ஆனால் நாங்கள் போர்க்களத்தில் பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தப்படுகிறோம். எங்களுக்கு போர் வேண்டாம்; அமைதியான வாழ்க்கையே வேண்டும்" எனச் சொல்லியிருந்தனர்.

இந்நிலையில், உக்ரைன் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர்களை அதிபர் ஜெலன்ஸ்கி குழந்தைகள் என கூறி இருப்பது தற்போது உலகம் முழுவதிலும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

"உங்க வீட்டுக்கு வந்தா சாப்பாடு போடுவீங்களா?".. வீடியோ காலில் CM கேட்ட கேள்வி.. நெகிழ்ச்சியில் நரிக்குறவ மக்கள் சொன்ன பதில்..!

RUSSIANS, UKRAINE, UKRAINE MAYOR, RUSSIAN MILITIAS, RUSSIA UKRAINE WAR, ரஷ்யா உக்ரைன் போர், ரஷ்யா போர், உக்ரைன் மேயர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்