அச்சோ! ஐரோப்பாவின் ராட்சத அணு உலையில் குண்டு வீசிய ரஷ்யா.. "செர்னோபில்-ல விட 10 மடங்கு".. எச்சரிக்கும் உக்ரைன்.. பதற்றத்தில் உலக நாடுகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மீது வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தாக்குதலை நிறுத்துமாறு ரஷ்ய படைகளுக்கு உக்ரேனிய வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதை எதிர்த்துவந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார். இதனை அடுத்து பெலாரஸ் எல்லையில் குவித்து வைக்கப்பட்டு இருந்த சுமார் ஒன்றரை லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்தனர். இதனை அடுத்து ஆறு பகுதிகளில் இருந்தும் உக்ரைனை தாக்கி வருகிறது ரஷ்யா.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றன. இதன் காரணமாக Zaporizhzhia அணுமின் நிலையத்தின் பவர் யூனிட் பிரிவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரே டஸ் தெரிவித்து இருக்கிறார்.
தென்கிழக்கு உக்ரைனில் உள்ள தொழில் நகரமான Zaporizhzhia இல் உள்ள இந்த அணுமின் நிலையம், உக்ரைன் நாட்டின் அணுசக்தியில் 40 சதவீதத்தை வழங்குகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திவிடும் என குலேபா எச்சரித்து இருக்கிறார்.
இதுகுறித்து குலேபா வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில்,"இந்த அணுமின் நிலையம் வெடித்தால், அது சோர்னோபிலை விட 10 மடங்கு பெரியதாக இருக்கும். ரஷ்யர்கள் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும், தீயணைப்பு வீரர்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும், பாதுகாப்பு மண்டலத்தை நிறுவ வேண்டும்," எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷ்யா தாக்கி இருப்பதால் அங்கே தீ விபத்து ஏற்பட்டு இருப்பது உலக அளவில் பலரையும் திடுக்கிட வைத்து இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே நேற்று நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களை வெளியேற்ற ரஷ்யா அனுமதித்திருந்த நிலையில், உக்ரைனின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
போதை பொருள்-ன்னு இதையா.. வித்திட்டு இருக்காங்க?.. சென்னை போலீசிடம் வசமாக சிக்கிய 4 பேர்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Russia – Ukraine Crisis: "ரஷ்யாவில் எங்களது ஓடிடி இயங்காது".. பிரபல நிறுவனம் பரபரப்பு அறிவிப்பு..!
- உக்ரைன் அதிபருக்கு ஸ்கெட்ச் போட்ட ரஷ்யா.. "முக்கிய டீமை உள்ள இறக்கிடுச்சு".. அதிகாரிகள் சொன்ன அதிரவைக்கும் செய்தி..!
- Russia – Ukraine Crisis: இந்திய மாணவர்கள் விமானத்துல ஏறினதும்.. பைலட் சொன்ன விஷயம்.. கண்கலங்கிய மாணவர்கள்.. வைரல் வீடியோ..!
- "பக்கத்திலேயே வெடிகுண்டு சத்தம்.. சாப்பாடு, தண்ணி கூட இல்ல.." கதறும் தமிழக மாணவி.. நெஞ்சை பிழியும் வீடியோ கால்
- "இனி உங்களோட பிசினஸ் பண்ண மாட்டோம்".. ரஷ்யாவிலிருந்து வெளியேறும் முக்கிய பெட்ரோல் நிறுவனம்..!
- "உயிரோட இருக்கணும்னா.. இதை செய்யுங்க" ரஷ்ய வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் சொன்ன அட்வைஸ்..!
- "நம்பிக்கை எல்லாம் போய்டுச்சு..என்ன நடக்குதுன்னே தெர்ல"..உக்ரைனில் இருந்து கண்ணீருடன் கோரிக்கை வைத்த இந்திய மாணவி.. வைரல் வீடியோ.!
- Ukraine - Russia Crisis : "இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணமே அவங்க தான்.." வட கொரியா வெளியிட்ட கருத்தால் அதிர்ச்சி
- வொர்க் ஃப்ரம் ஹோம்ல கோடீஸ்வரன் ஆயிட்டேன்.. இது எப்படி சாத்தியமாச்சுன்னா.. அனுபவத்தை பகிர்ந்த இளைஞர்
- யாரெல்லாம் 'அந்த வாக்சின்' போட்டீங்களோ... அவங்களுக்கு 'கிரீன் பாஸ்' தர முடியாதுங்க...! - அனுமதி வழங்க மறுத்த ஐரோப்பிய ஒன்றியம்...!