தமிழக முதல்வர் முதல் உலகத்தமிழ் அறிஞர்கள் வரை .. சோகத்தில் ஆழ்த்திய மறைவு! கொரோனாவால் மறைந்த இந்த துப்யான்ஸ்கி என்பவர் யார்?!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்குத் தொண்டாற்றிய அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கொரோனா காரணமாக உயிரிழந்தார்.
1941-ஆம் ஆண்டு ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் பிறந்த அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி. 1970-ஆம் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்ற இவர், சமஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் புலமை பெற்றிருந்தார்.
சோவியத் யூனியனில் தமிழ்மொழி சார்ந்த பதிப்புகள் குறைந்துபோது சொந்த முயற்சியினாலும், ஆய்வுப் பார்வையினாலும் தமிழ் வளர்க்கும் பணியைத் தொடர்ந்தார் துப்யான்ஸ்கி. 10 பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுத்தார். அரை நூற்றாண்டு காலமாகத் துப்யான்ஸ்கி தமிழ்
கற்பித்து வந்தார். 2000-ல் 'ரிச்சுவல் அண்டு மித்தாலஜிக்கல் சோர்ஸஸ் ஆஃப் தி ஏர்லி தமிழ் பொயட்ரி' என்ற புத்தகத்தை வெளியிட்டவர், சங்க இலக்கியத்தின் தொன்மங்கள், சடங்குகள் குறித்து அந்த புத்தகத்தில் எழுதினார்.
தனது தொல்காப்பியம் குறித்த ஆய்வுக்கட்டுரையை 2010-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த செம்மொழி ஆய்வு மாநாட்டில் பங்கேற்ற துப்யான்ஸ்கி சமர்ப்பித்தார். இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, தனது 79-வது வயதில் மாஸ்கோவில் காலமானார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழ் அறிஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவங்க எப்படி இத பண்ணலாம்?'.. ரஷ்யா, வடகொரியாவை... கடுமையாக சாடிய மைக்ரோசாப்ட் நிறுவனம்!.. வெளியான அதிர்ச்சி தகவல்!
- இருட்டுல தெரியாம சுட்டுட்டோம்.. ‘மன்னிசிடுங்க’.. தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட ‘ஹெலிகாப்டர்’.. பரபரப்பு சம்பவம்..!
- 'நேத்தும் களத்தில் தொடர்ந்து கேட்ட தமிழ்'... 'ஆனா அங்கதான் டிவிஸ்ட்டே?!!'... 'பேசினது அவரு இல்ல!!!'... 'வைரலாகும் சுவாரஸ்ய சம்பவம்!'...
- "உங்களுக்கு தெரியாதது ஏதாவது இருக்கு?!!"... 'CSK மேட்சில் தினேஷ் கார்த்திக் செய்த வைரல் சம்பவம்!!!'... 'அம்பயர் Reaction தான் ஹைலைட்டே!!!'...
- தஞ்சை பெரிய கோயில் கருவறையில்... ஓங்கி ஒலித்த 'தெய்வத் தமிழ்!'... 1035-ம் ஆண்டு ஐப்பசி சதய விழா!.. இந்த ஆண்டு மட்டும் ரொம்ப விசேஷம்!.. ஏன் தெரியுமா?
- “இந்தியாவிலும் தன்னார்வலர்கள் மீது தடுப்பூசி செலுத்தி பரிசோதனை!”.. எத்தனை பேருக்கு?.. ‘எந்த’ நாட்டு தடுப்பூசி? முழு விபரம்!
- 'விண்வெளியில ஏகப்பட்ட பிரச்சனை...' 'ஒரே ஒரு தேயிலை இலையால...' 'எல்லா பிரச்சனையும் சரி ஆயிடுச்சு...' - வியக்க வைத்த விண்வெளி ஆச்சரியம்...!
- ‘மௌனம்’ கலைத்த ‘விஜய் சேதுபதி’! முத்தையா முரளிதரனின் ‘பரபரப்பு’ அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே.. விஜய் சேதுபதி போட்ட வைரல் ‘ட்வீட்!’
- 'உலகின் 2வது கொரோனா தடுப்பூசியும் Ready!!!'... '3வது தடுப்பூசியும், அதிவிரைவில்??!'... 'பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள'... 'அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்!...
- 'தொல்லியல் படிப்புக்கான கல்வித்தகுதியில்'... 'தமிழ் மொழி சேர்ப்பு'... - 'பிரதமருக்கு நன்றி தெரிவித்து'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!'...