"அவரு ஜெயிச்சத எல்லாம் ஏத்துக்க முடியாதுபா... மொதல்ல 'அந்த' விஷயம் நடக்கட்டும்..." - 'ரஷ்ய' அதிபர் சொன்ன பரபரப்பு 'காரணம்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த மூன்றாம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பை வீழ்த்தி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றிருந்தார்.

ஆனால் இந்த வெற்றி குறித்து அமெரிக்க தேர்தல் ஆணையம் எந்த வித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. அதே போல, இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ள டிரம்ப், தனது தோல்வியை ஏற்க மறுத்து பல பரபரப்பு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். 

அதிகாரபூர்வமாக, பிடனின் வெற்றி குறித்து தகவல் வெளியாகாமல் இருந்தாலும், இந்தியா, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளின் பிரதமர்கள் மற்றும் அதிபர்கள், பிடனின் வெற்றியை அங்கீகரித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால், ரஷ்யாவின் சார்பில் பிடனுக்கு வாழ்த்து தெரிவிக்கப்படவில்லை. முழுமையான தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியான பிறகு தான் வாழ்த்து சொல்ல முடியும் என ரஷ்யா ஏற்கனவே அறிவித்திருந்தது. 

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அளித்த பேட்டி ஒன்றில், 'புதினை புதிய அதிபராக அங்கீகரிக்க முடியாது' என தெரிவித்துள்ளார். மேலும், 'அமெரிக்க தேர்தலில் யார் வென்றாலும் எங்களுக்கு கவலையில்லை. ஆனால் ஜோ பிடன் பெற்ற வெற்றியை தற்போதைக்கு ரஷ்யா ஏற்காது. இந்த தேர்தல் முடிவை சில மக்களும், எதிர்க்கட்சிகளும் ஏற்கவில்லை. அமெரிக்க மக்களின் முழுமையான அங்கீகாரம் பெற்று அதிகாரபூர்வமான அறிவிப்பும் வந்த பின் பார்த்துக் கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்