'இப்படி 'ப்ரபோஸ்' பண்ணுனா யாருக்கு தான் லவ் வராது'... 'நீ கலக்கு தலைவா'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், ராணுவ வீரர் ஒருவர் தனது காதலை வெளிப்படுத்திய விதம் இணையத்தை கலக்கி வருகிறது.
ரஷியாவின் அலபினோ பகுதியில் உள்ள ராணுவ படைப்பிரிவில் வீரராக பணி புரிபவர் டெனிஸ் கென்ஸ்செவ். இவர் அலெஸ்சாண்டிரியா என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். ஆனால் தனது காதலை வெளிப்படுத்த தக்க தருணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்த அவருக்கு காதலர் தினமும் வந்தது. இதையடுத்து தனது காதலியிடம் தனது காதலை கூற முடிவு செய்த டெனிஸ், அலெஸ்சாண்டிரியாவை தான் பணிபுரியும் ராணுவ தளத்திற்கு அழைத்துள்ளார்.
ராணுவ தளத்திற்கு வந்த தனது காதலியின் கண்களை மூடிய காதலன் ராணுவ தளத்தின் மையப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே தயாராக இருந்த டெனிஸின் சக வீரர்கள், 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்போது காதலியின் கண்ணை திறந்த டெனிஸ், கையில் பூங்கொத்துடன், தனது காதலை வெளிப்படுத்தினார். அப்போது காதலி அலெஸ்சாண்டிரியா ராணுவ டேங்கர்கள் இதய வடிவில் சுற்றி நிற்பதையும், காதலன் டெனிஸ் கையில் பூங்கொத்துடன் தன்னை லவ் ப்ரபோஸ் செய்ததையும் கண்டு வாயடைத்து போனார்.
இதையடுத்து என்னை காதலிக்கிறாயா? என கேட்ட டெனிசின் கேள்விக்கு இன்ப அதிர்ச்சியில் இருந்த அலெஸ்சாண்டிரியா, உடனடியாக ஆம் என கூறி காதலுக்கு சம்பதம் தெரிவித்தார். இதனால் காதலர்கள் இருவரும் கட்டியணைத்து அன்பை பரிமாறி கொண்டார்கள். 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ராணுவ வீரர் தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பலரையும் கவர்ந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘3 வருஷ க்ளோஸ் ஃப்ரண்ட்’.. ஆணாக மாறி தோழியை திருமணம் செய்த ‘இளம்பெண்’!
- VIDEO: 'ஸ்டைலா... கெத்தா... வந்து நின்ன காதல் பரிசு!'... 'விலை எவ்ளோனு தெரிஞ்சா தல சுத்திடும்'... காதலி கொடுத்த ஷாக்!
- ‘காதலிக்க’ பெண் தேவை... ‘தேர்ந்தெடுக்கப்பட்டால்’ காத்திருக்கும் ‘ஜாக்பாட்!’... தொழிலதிபரின் ‘வைரல்’ விளம்பரம்...
- 'கொன்னுட்ட தலைவா'... 'இப்படி ஒரு 'love ப்ரோபோசலை' பாத்திருக்க முடியாது'... செம கியூட் வீடியோ!
- தன் கையால் செய்த பரிசுப் பொருளை... ஆசையாக காதலிக்கு கொடுக்க நினைத்து... இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்... மருத்துவர்களால் நடந்த அதிசயம்!
- 'தூங்கிட்டு இருந்தேன்.. மேல ஏதோ ஊத்தினா'.. 'கண் முழிச்சு பாத்தா'.. சந்தேகக் காதலி.. நெஞ்சை உலுக்கும் மரண வாக்குமூலம்!
- ‘ஆன்லைனில் காதல்’! ‘காதலியை நேரில் பார்க்க போன சாஃப்ட்வேர் இன்ஜீனியர்’.. எதிர்பாராம நடந்த பெரிய ட்விஸ்ட்..!
- ‘தனியாக இருக்கிறேன் என அழைத்ததை’.. ‘நம்பிச் சென்ற இளைஞருக்கு’.. ‘காதலியால் நடந்த கொடூரம்’..
- ‘சாரி அம்மா.. நான் எந்தப் பொண்ணையும் காதலிக்கல’.. ‘கடிதம் எழுதிவிட்டு மாணவர் எடுத்த விபரீத முடிவு’..
- 'வாக்குவாதத்தில் ஈடுபட்ட காதலியை’... 'பயமுறுத்த காதலன் செய்த காரியம்'!