"கொஞ்ச நேரத்துல போர் முடிவுக்கு வந்துடும்".. தகவல் அனுப்பிய ரஷ்ய ராணுவ ஜெனரல்.. ஆனா நடந்ததே வேற..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைனில் போரிட்டுவந்த ரஷ்ய ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு அறிவித்திருக்கிறது.

Advertising
>
Advertising

போர்

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து கடல், வான் மற்றும் தரை வழியாக தாக்குதலை நடத்திவருகிறது ரஷ்யா. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவமும் களத்தில் எதிர்த் தாக்குதல் நடத்திவருகிறது. உக்ரைனின் கீவ், கார்க்கிவ் மற்றும் மரியு போல் ஆகிய நகரங்களில் இரு நாட்டு ராணுவங்களுக்கிடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த போர் காரணமாக ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 3 மில்லியன் மக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்து உள்ளது.

தாக்குதல்

இந்நிலையில், ரஷ்ய இராணுவத்தின் 49 வது ஒருங்கிணைந்த ஆயுதப் பிரிவின் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் யாகோவ் ரெசான்ட்சேவ், உக்ரேனிய ஆயுதப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்து உள்ளது.

இதுவரையில், 4 ரஷ்ய தளபதிகள் உக்ரைன் போரில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு ரஷ்ய தளபதி போரில் மரணமடைந்திருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் ஒலெக்சி அரிஸ்டோவிச் வெளியிட்ட வீடியோவில்,"49 வது ரஷ்ய தெற்கு மாவட்ட இராணுவத்தின் தளபதி ஜெனரல் யாகோவ் ரியாசன்ட்சேவ், கெர்சனுக்கு அருகிலுள்ள சோர்னோபாய்வ்காவில் நடந்த ஒரு தாக்குதலில் உக்ரைன் படைகளால் கொல்லப்பட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

போர் முடிவுக்கு வந்துடும்

தற்போது இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள யாகோவ் ரியாசன்ட்சேவ், உக்ரைன் மீதான போர் துவங்கிய நான்காவது நாளில், தனது படை வீரர்களிடம்," இன்னும் சில மணி நேரங்களில் இந்தப் போர் முடிவிற்கு வந்துவிடும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அந்த படை வீரர்," சில மணி நேரங்களில் இந்த ராணுவ நடவடிக்கை முடிவிற்கு வந்துவிடும் என்றார். ஆனால் இது இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது' என்றார்.

உக்ரைனில் ரஷ்ய தளபதி கொல்லப்பட்டதாக வெளியான தகவல், அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

UKRAINE, RUSSIA, WAR, உக்ரைன், போர், ரஷ்யா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்