ஆத்தாடி.. வலையில் சிக்கிய டிராகன்.. அதிர்ந்துபோன மீனவர்.. வைரலாகும் புகைப்படம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நார்வே நாட்டில் உள்ள கடலில் வித்தியாசமான மீன் ஒன்றை பிடித்திருக்கிறார் ரஷ்யாவை சேர்ந்த மீனவர் ஒருவர். அந்த மீனின் புகைப்படம் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆத்தாடி.. வலையில் சிக்கிய டிராகன்.. அதிர்ந்துபோன மீனவர்.. வைரலாகும் புகைப்படம்..!
Advertising
>
Advertising

நார்வே கடல்

ரஷ்யாவில் பிறந்து வளர்ந்தவரான ரோமன் ஃபெடோர்சோவ் என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். 39 வயதான ரோமன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நார்வே கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றிருக்கிறார். வலை வீசிய ரோமன் சிறிது நேர காத்திருப்பிற்கு பிறகு தனது அதிர்ஷ்டத்தை சோதித்திருக்கிறார். வலையை அவர் வெளியே எடுக்க, அதன் உள்ளே வித்தியாசமான ஏதோ ஒன்று இருப்பதை அவர் பார்த்துள்ளார்.

Russian Fisherman Finds dragon like fish in the Norwegian Sea

டிராகன்

வலையை படகிற்குள் இழுத்த ரோமன், உள்ளே இருந்த வித்தியாசமான உயிரினத்தை வெளியே எடுத்திருக்கிறார். பெரிய கண்கள், வால், பிங்க் நிற உடல் அமைப்பு என டிராகன் போலவே எந்த உயிரினம் இந்திருக்கிறது. இதனை அடுத்து அந்த மீனை புகைப்படம் எடுத்த ரோமன் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மர்மம்

இந்நிலையில், ரோமன் பிடித்தது சிமேரா (chimaera) என்னும் அரியவகை மீன் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இதனை ghost sharks என்றும் அழைக்கிறார்கள். பொதுவாக கடலின் அடியாழத்தில் வசிக்கும் இந்த மீன்கள் சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வைரல் புகைப்படம்

ரோமன் தனது வித்தியாசமான மீனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர 22,000 பேர் அதனை லைக் செய்து உள்ளனர். மேலும், இதுகுறித்து ரோமன் பேசுகையில், வடக்கு ரஷ்யாவில் உள்ள நோர்வே மற்றும் பேரண்ட்ஸ் கடல்களிலும், அட்லாண்டிக் கடலின் ஆழத்திலும் பல விசித்திரமான உயிரினங்களை பிடித்திருப்பதாக தெரிவித்தார். 

பார்ப்பதற்கு டிராகன் போலவே காட்சியளிக்கும் அறியவகை சிமெரா மீனின் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் படுவைரலாக பரவி வருகிறது.

FISHING, DRAGON, GHOSTSHARK, நார்வே, டிராகன், மீன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்