'நீங்க வேணும்னா எடுத்துக்கோங்க... 'இந்த மருந்து' எங்களுக்கு வேண்டாம்'!.. ரஷ்ய மருத்துவர்கள் கூறுவது என்ன?.. வெளியான 'பகீர்' தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை அந்நாட்டு மருத்துவர்கள் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதாக ரஷ்யா முன்னதாக அறிவித்திருந்தது. Sputnik V என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்து தான், உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தாக கருதப்படுகிறது.

ஆனால், இம்மருந்தை உலக சுகாதார நிறுவனம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், ரஷ்யாவின் 52 விழுக்காடு மருத்துவர்கள் Sputnik V-ஐ ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

RBC செய்தி நிறுவனம் 3000 ரஷ்ய மருத்துவர்களிடம் நடத்திய ஆய்வில், 24 விழுக்காடு மருத்துவர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்த மருத்துவர்களில், Sputnik V-இல் போதிய தரவுகள் இல்லை என்று ஒரு சிலரும், மிக விரைவாக உருவாக்கப்பட்டுள்ளது என்று ஒரு சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, Sputnik V தடுப்பு மருந்தானது 2 ஆண்டுகளுக்கு covid19 வைரஸிடம் இருந்து பாதுகாக்கும் தன்மையுடையதாக ரஷ்ய அரசு கூறியிருக்கிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்