“இந்தியாவிலும் தன்னார்வலர்கள் மீது தடுப்பூசி செலுத்தி பரிசோதனை!”.. எத்தனை பேருக்கு?.. ‘எந்த’ நாட்டு தடுப்பூசி? முழு விபரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வரும் நிலையில், அந்த தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டதாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை இந்தியாவுக்கு வழங்க, ஆர்டிஐஎப் , மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவிற்கு 10 கோடி மருந்துகளை வழங்குவதாகத் தெரிவித்தது.

இந்நிலையில், இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தப்பட்டு 3 கட்டங்களாக பரிசோதிக்கப்படவுள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜி) தெரிவித்துள்ளது. இதற்கு டி.சி.ஜி.ஐ அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், சோதனை நடைபெறும் தேதி மற்றும் நேரம் குறித்து அந்த நிறுவனம் முடிவு செய்யும்.

இதில் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என டிசிஜிஐ பரிந்துரை செய்திருந்தது.  அதன்படி 2-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் 100 பேருக்கும், 3ம் கட்ட பரிசோதனையில் 1,400 பேருக்கும் இந்த தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்படும் என கூறப்படுகிறது.  அதேசமயம் 2-ஆம் கட்ட பரிசோதனைக்குப் பிறகு மருந்தின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்டவை பற்றிய தரவு முடிவுகளைப் பொறுத்தே, 3 ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்