பிரீஃப்கேஸை 'திருமணம்' செய்து கொண்ட 'இளம்பெண்'!!... நான் இப்டி ஒரு முடிவெடுக்க 'காரணம்' இது தான்... அவரே சொன்ன 'விளக்கம்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உயிரற்ற பொருட்கள் மீது ஈர்ப்பு கொண்ட பெண் ஒருவர், பிரீஃப்கேஸ் ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இப்படி உயிரற்ற பொருட்கள் மீது ஈர்ப்பு வருவது 'Objectophilia' எனப்படும். அப்படி உயிரற்ற பொருட்கள் மீது அதிகம் ஈடுபாடு உடையவர்கள் அந்த பொருளின் பால் அதிகம் அன்பையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவார்கள். ரஷ்ய நாட்டின் மாஸ்கோ பகுதியைச் சேர்ந்த ரெயின் கோர்டன் (Rain Gordon) என்ற பெண், பிரீஃப்கேஸ் ஒன்றின் மீது கொண்ட காதலால் அதனை திருமணம் செய்து கொண்டு தற்போது அதனை கணவர் என அழைத்து வருகிறார்.  

'பொருட்களின் மீதான என் மோகம் எட்டு வயதிலிருந்தே ஆரம்பித்து விட்டது. நம்மைச் சுற்றியுள்ள மனித உயிர்கள் மட்டுமில்லாமல் அனைத்து பொருட்களிலும் ஒரு உயிரும், ஆத்மாவும் உள்ளது என நம்பினேன். எனது சிறிய வயதிலும், டீன் ஏஜின் போதும் எனது நகரத்தில் திறக்கப்பட ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் அங்குள்ள உயிரற்ற பொருட்கள் மீது அதிக ஈர்ப்பு கொண்டேன். சமுதாயத்தின் காரணமாக, அது தவறு என்றும் எனக்கு தெரிந்தது. அதனால் யாரிடமும் இதனை தெரிவிக்கவில்லை' என்றார். 

அதே போல, கடந்த 2017 ஆம் ஆண்டு ரெயின் கோர்டன், ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், பிரீஃப்கேஸ் மீதுள்ள அன்பை விட அதிகமாக அந்த காதலரிடம் காட்ட முடியவில்லை எனக்கூறி, தனது காதலரை மறுத்து பிரீஃப்கேஸை தனது வாழ்க்கை துணையாக தேர்வு செய்துள்ளார் ரெயின் கோர்டன். கடந்த 2015 ஆம் ஆண்டு, ஹார்டுவேர் ஸ்டோர் ஒன்றில் இந்த பிரீஃப்கேஸை கண்டுள்ள நிலையில், அன்று முதல் அதன் மீது ஒருவித ஈர்ப்பு கோர்டனுக்கு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்