இது மட்டும் நடந்தது கடும் பின்விளைவுகளை சந்திப்பீங்க.. 2 நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், இப்போது திடீரென 2 நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யா
கடந்த சில வாரங்களாகவே உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தை அதிபர் புதின் குவித்து வந்தார். இந்த சூழ்லில், உக்ரைன் மீது முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்க அதிபர் புதின் ஆணையிட்டார். அதன்படி உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் நடவடிக்கைக்கு உலகின் பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பொருளாதார தடை
ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க தொடங்கி உள்ளன. ஆனால் புதின் இந்த தடைகளைக் கண்டு எல்லாம் அஞ்சியதாகத் தெரியவில்லை. உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் சேருவது குறித்து வெளியான தகவல் காரணமாகவே, அந்நாட்டின் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
நேட்டோ
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை காரணமாக கிழக்கு ஐரோப்பாவின் வேறு சில நாடுகளும் நேட்டோ அமைப்பில் இணைவது குறித்து ஆலோசிக்கத் தொடங்கி உள்ளன. குறிப்பாக, பின்லாந்து நாடு, ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக ஆலோசிக்க வேண்டிய சூழலை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் ஸ்வீடன் அரசும் கூட இதேபோல ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியானது. இது ரஷ்யாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரியா ஜாகரோவா
இந்த நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைந்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ‘வடக்கு ஐரோப்பாவின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பின்லாந்து அரசின் ராணுவ அல்லாத கூட்டணி கொள்கை முக்கியமானது. ஆனால், நேட்டோ அமைப்பு இப்போது ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடனை நேட்டோவில் சேர்க்க முயற்சி எடுத்து வருவதைப் பார்க்க முடிகிறது. இதுதொடர்பாக இவர்கள் கடந்த காலங்களிலும் ஆலோசித்துள்ளனர்.
பகிரங்க எச்சரிக்கை
இந்த இரு நாடுகளும் கடந்த காலங்களில் நேட்டோ ராணுவப் பயிற்சிகளை நடத்தியுள்ளனர். நேட்டோ அமைப்புக்கு ஆதரவாகவே இந்த இரு நாடுகளும் செயல்பட்டு வருகின்றன. பின்லாந்தும், ஸ்வீடனும் மற்ற நாடுகளின் பாதுகாப்பிற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் முடிவுகளை எடுக்கக் கூடாது. இந்த இரு நாடுகளும் நேட்டோ அமைப்பில் இணைவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதற்காக பின்லாந்தும், ஸ்வீடனும் ராணுவ ரீதியாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ரஷ்யர்களாக இருக்க வெட்கப்படுறோம்.. போர் வேண்டாம்.. இன்று உக்ரைன், நாளை நீங்களாக இருக்கலாம்".. ரஷ்ய மக்கள் போர்க்கொடி
- பேச்சுவார்த்தைக்கு நாங்க ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. ரஷ்யா திடீர் அழைப்பு..!
- உக்ரைன் மீது தொடர் போரிட்ட ரஷ்ய படைகள்.. வீடியோக்களை பகிர்ந்த மக்கள்.. ட்விட்டர் தந்த அதிரடி விளக்கம்
- கிச்சன் வரை பாதிக்கும் ரஷ்யா-உக்ரைன் போர்.. இல்லத்தரசிகளுக்கு புதிய தலைவலியா?.. உயருது "முக்கிய" எண்ணெய் விலை
- "போர்ல எங்களோட நிக்க யாருமே இல்ல.. தனியா நிக்குறோம்!".. உக்ரைன் அதிபரின் நெஞ்சை பிழியும் பேச்சு
- "நாஜி படைகள் போல் தாக்கிய ரஷ்யா".. தீய பாதையில் செல்வது சரியல்ல.. உக்ரைன் அதிபர் ஆவேசம்!
- உக்ரைன் வாழ் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் .. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Russia-Ukraine Crisis: "அவங்களோட நம்பர்.1 டார்கெட் நான்தான்.. என்ன ஆனாலும் சரி".. அதிபரின் உருக்கமான வீடியோ..!
- "இந்த நூற்றாண்டோட ஹிட்லர் தான் புதின்.. இத மட்டும் அவரு பண்ணலன்னா மூன்றாம் உலக போர் கன்ஃபார்ம்.." எச்சரிக்கும் உக்ரைன் எம்.பி
- ரஷ்யா - உக்ரைன் போர்: கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டை மொத்தமாக சரித்த போர்.. உறைந்துபோன முதலீட்டாளர்கள்.!