"ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடைய மாட்டோம்".. உக்ரைன் அதிபர் அதிரடி அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகமே இப்போது ரஷியா - உக்ரைன் போர் குறித்த நடவடிக்கைகளை அச்சத்துடன் கவனித்து வருகிறது. என்ன ஆனாலும் உக்ரைன் மீது போர் தொடுப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின். இதற்காக சுமார் ஒன்றரை லட்சம் ரஷிய வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் தலையிடும் நாடுகளுக்கு தக்க பதிலடி தரப்படும் எனவும் புதின் எச்சரித்துள்ளார்.

Advertising
>
Advertising

"என் மகன் பேட்டி கொடுத்தது தப்பா.. வீட்டை காலி பண்ண சொல்லிட்டாங்க".. Viral சிறுவனின் தாய் கண்ணீர் பேட்டி..!

நவீன காலத்தில் மிகப்பெரிய போராக கருதப்படும் இதனை தற்போது துவங்கி பிள்ளையார் சுழி போட்டு வைத்திருக்கிறது ரஷ்யா. சற்று நேரம் முன்னர், உக்ரைன் தலைநகரான கியூ மற்றும் கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்க், மைக்கோல், மரியூபோல், ஒடேசா, கார்கிவ் நகரங்களில் பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.போர் துவங்கி இருப்பதை ஐ.நா.,வுக்கான உக்ரைன் தூதர் செர்ஜி கில்சிஸ்டியா உறுதி செய்துள்ளார்.

உலக தலைவர்கள் வலியுறுத்தல்

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போரை கைவிட உலக நாடுகள் உதவிட வேண்டும் என உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என  ரஷியாவுக்கு ஜெர்மனி வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல, இங்கிலாந்து அதிபர் போரிஸ் ஜான்சனும் ரஷ்யா போரை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதுபற்றி பேசுகையில்," இந்த போரினால் ஏற்படும் இழப்புகளுக்கு ரஷ்யாவே முழு பொறுப்பு" என்று சாடியுள்ளார்.

எதிர் தாக்குதல்

உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லும்படி ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் உக்ரைன் படைகள் பின்வாங்காமல் பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளன. கடல்வழி, வான் மற்றும் தரை என மும்முனை தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சரணடைய மாட்டோம்

இந்நிலையில் "ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம்" என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக கூறி உள்ளார். மேலும் ரஷியா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ரஷ்யப் படைகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருக்கும் அனைத்து மக்களும் முன்வர வேண்டும். ரஷிய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும்.  ரஷ்யர்கள் வெளியே வந்து போருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருக்கிறார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் வேளையில், அண்டை நாடான லிதுவேனியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்நாட்டின் அதிபர் கிடானஸ் நௌசேடா அறிவித்திருக்கிறார்.

ரஷ்யா துவங்கி இருக்கும் இந்த போர் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ? என்ற அச்சத்தில் உலக மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

வரலாற்றில் முதன்முறையாக நாகர்கோவில் மாநகராட்சியை கைப்பற்றுகிறதா பாஜக? ஆனா அதுக்கு அந்த விஷயம் நடக்கணுமே..?

RUSSIA WAR ON UKRAINE, ZELENSKY, WE WILL NOT SURRENDER, ரஷியா - உக்ரைன் போர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்