எல்லாரும் நினைக்கிறமாதிரி ரஷ்யா கருங்கடல்ல போர் கப்பலை மட்டும் நிறுத்தல.. வேற ஒன்னும் செஞ்சிட்டு இருக்காங்க.. குண்டைத் தூக்கிப்போட்ட அமெரிக்கா !

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யா தனது கருங்கடல் கப்பல் படையை பாதுகாக்க புதிய முயற்சியில் இறங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருப்பது உலக நாடுகளிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.

எல்லாரும் நினைக்கிறமாதிரி ரஷ்யா கருங்கடல்ல போர் கப்பலை மட்டும் நிறுத்தல.. வேற ஒன்னும் செஞ்சிட்டு இருக்காங்க.. குண்டைத் தூக்கிப்போட்ட அமெரிக்கா !
Advertising
>
Advertising

கருங்கடல்

செவாஸ்டோபோல் கருங்கடலில் உள்ள ரஷ்ய கடற்படையின் மிக முக்கியமான கடற்படை தளமாகும். 2014 இல் மாஸ்கோவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ளது இந்த துறைமுகம். ஆகவே இதற்கு கூடுதல் பாதுகாப்பும் முக்கியத்துவத்தையும் அளிக்கிறது ரஷ்யா. இந்நிலையில், இந்த துறைமுகத்தில் பயிற்சி பெற்ற இரண்டு டால்பின்களை ரஷ்யா உளவு நோக்கத்திற்காக பயன்படுத்துவதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

Russia using trained military dolphins to protect warships

யுனைடெட் ஸ்டேட்ஸ் நேவல் இன்ஸ்டிடியூட் (USNI) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஷ்யா கருங்கடலின் செவாஸ்டோபோல் கடற்படை தளத்தில் பயிற்சி பெற்ற இரண்டு இராணுவ டால்பின்களை வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலிருந்தே

ஐரோப்பிய யூனியனுடன் இணைய உக்ரைன் விருப்பப்பட்ட நிலையில் அண்டை நாடான ரஷ்யா இதனை கடுமையாக எதிர்த்து வந்தது. பிறகு பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைனில் சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பெலாரஸ் நாட்டில் குவித்துவைக்கப்பட்ட சுமார் ஒன்றரை லட்சம் வீரர்கள் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை துவங்கினர். இந்நிலையில், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் அருகே அமைந்துள்ள செவாஸ்டோபோல் கடற்படை தளத்தில் பயிற்சி பெற்ற இரண்டு இராணுவ டால்பின்களை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

சேட்டிலைட் புகைப்படங்கள்

பனிப்போர் காலத்தில் இருந்தே ராணுவ நடவடிக்கைகளுக்காக ரஷ்யா டால்பின்களை பயன்படுத்திவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனிடையே உக்ரைன் உடனான போருக்கு மத்தியில் ரஷ்ய ராணுவம் மீண்டும் டால்பின்களை உளவு காரியங்களுக்காக பயன்படுத்தி வருவதாக USNI குற்றம்சாட்டியுள்ளது. மேலும், கருங்கடல் பகுதியில் பெலுகா எனப்படும் திமிங்கிலத்தையும் நீர் நாய்களையும் உளவு பணியில் பயன்படுத்தி வருவதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்த சேட்டிலைட் புகைப்படங்களையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

உக்ரைன் போருக்கு மத்தியில் கருங்கடலில் போர்க் கப்பல்களை ரஷ்யா அதிகளவில் நிறுத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தநிலையில் தற்போது ரஷ்யா டால்பின்களை உளவு பணிகளுக்காக பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

 

RUSSIA, USA, BACKSEA, ரஷ்யா, அமெரிக்கா, கருங்கடல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்