"உக்ரைன் மீது தடைசெய்யப்பட்ட குண்டை வீசத் தொடங்கியது ரஷ்யா".. US உக்ரைன் தூதர் போட்டு உடைத்த உண்மை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இதனை தொடர்ந்து கடல், வான் மற்றும் தரை வழியாக உக்ரைனுக்குள் தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா.

Advertising
>
Advertising

உலக நாடுகள் எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை உலக நாடுகள் பலவும் கண்டித்து வருகின்றன. அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இருப்பினும், உக்ரைனை ரஷ்யாவுடன் இணைக்கும் முயற்சியில் பின்வாங்கவில்லை புதின்.

தற்காப்பு தாக்குதல் 

ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, தற்காத்துக்கொள்ளும் விதமாக ஆயுதம் ஏந்தியது உக்ரைன். இந்த போரில் பங்கு பெறுபவர்களுக்கு ஆயுதம் வழங்கப்படும் என்றும் உலக நாடுகள் தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் உக்ரைன் அதிபர் வொலோடிமர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து ரஷ்ய படைகளின் முன்னேற்றத்தை தடுக்க பல்வேறு தற்காப்பு தாக்குதலை உக்ரைன் அரசு முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், பல்வேறு உலக அமைப்புகளால் தடை செய்யப்பட்ட க்ளஸ்டர் குண்டுகள் (cluster bombs) மற்றும் வேக்கம் குண்டுகளை (vacuum bomb) உக்ரேன் மீது ரஷ்யா வீசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர்

நேற்று அமெரிக்க சட்ட நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்காவுக்கான  உக்ரைன் தூதர் ஒக்சனா மார்க்கரோவா," நேற்று, உக்ரைனின் பள்ளி ஒன்றின் அருகே பல்வேறு உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட வேக்கம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது ரஷ்யா. உக்ரைனில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இத்தகைய தாக்குதலை ரஷ்யா நடத்திவருகிறது" என்றார்.

மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்த வகை குண்டுகளை ரஷ்யா பயன்படுத்த துவங்கி இருப்பது உலக மக்களை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது.

RUSSIA, UKRAINE, VACCUMBOMB, ரஷ்யா, உக்ரைன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்