தீவிரம் ஆகும் உக்ரைன் ரஷ்யா போர்.. தமிழர்கள் உதவி கிடைக்க வழி அமைத்த தமிழக அரசு

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தீவிரம் ஆகும் உக்ரைன் ரஷ்யா போர்.. தமிழர்கள் உதவி கிடைக்க வழி அமைத்த தமிழக அரசு

Advertising
>
Advertising

ரஷ்யா - உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. மேலும், உக்ரைன் எல்லையில், ராணுவத்தை ரஷ்யா குவித்ததால் எந்த சமயத்தில் வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற பதட்டமான சூழல் நிலவி வந்தது.

ரஷ்யா - உக்ரைன் போர்

இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆணையிட்டார். உக்ரைனை ஆக்ரமிப்பது எங்களின் நோக்கமில்லை என்றும், எங்களை பாதுகாத்துக் கொள்ள இந்த நடவடிக்கை அவசியம் என்றும் புதின் குறிப்பிட்டிருந்தார். அதே போல, ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரில், மற்ற நாடுகள் தலையிட்டால் அவர்கள், இதுவரை வரலாறு காணாத அளவுக்கு மோசமான அழிவுகளை சந்திக்க நேரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உலக நாடுகள்

ரஷ்யாவின் முடிவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது. மேலும், ரஷ்யாவிற்கு பாகிஸ்தான், சீனா, இலங்கை, ஆப்கானிஸ்தான் என அத்தனை அண்டை நாடுகளும் ஆதரவாக உள்ளது. இதனிடையே, உக்ரைன் நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் விவகாரத்தில் உதவுவதற்கு தயாராக உள்ளதாக தமிழக அரசு, தூதரகத்திற்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தது.

தமிழர்களுக்கு உதவி

உக்ரைனில் இருக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பிற்காக சென்ற கல்லூரி மாணவர்கள் தான். இது தவிர, சிலர் வேலைக்காகவும் சென்றுள்ளனர். அதே போல, தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலானோர், உக்ரைன் நாட்டின் தலைநகர் பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்தவர்கள், பத்திரமாக தாயகம் திரும்ப உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது. 044-28515288 /96000 23645 /99402 56444 என்ற தொலைப்பேசி எண்ணிலும் www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவிகள் கோரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RUSSIA, UKRAINE, TAMILNADU PEOPLE, TN GOVT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்