ரஷ்யா - உக்ரைன் போர்: கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டை மொத்தமாக சரித்த போர்.. உறைந்துபோன முதலீட்டாளர்கள்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் மீதான போரை ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் அறிவித்ததை அடுத்து உலக அளவில் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தன. குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து பல அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று காலை பலத்த சரிவை சந்தித்தன. இருப்பினும் இன்றைய நாளின் துவக்கத்தில் சென்செக்ஸ் 1400 புள்ளிகள் உயர்ந்து வர்த்தமாகிக்கொண்டு இருக்கிறது.

Advertising
>
Advertising

கிரிப்டோ மார்க்கெட்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பது உறுதியான உடனேயே கிரிப்டோ கரன்சி சந்தையும் நேற்று பெரியளவில் சரிவை சந்தித்தது. பிரபல கிரிப்டோ கரன்சியான பிட் காயின் நேற்று 7.9 சதவீதம் சரிவை சந்தித்து $34,324 என்ற அளவில் வர்த்தகம் ஆனது. மற்றொரு பிரபல கரன்சியான ஈதர் 10.8 சதவீத சரிவை சந்தித்தது.

ஒருநாளில் எவ்வளவு இழப்பு

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கடந்த ஒரு மணி நேரத்தில் உலகம் முழுவதும் கிரிப்டோ மார்க்கெட் சரிவை சந்தித்த வேளையில், கடந்த 24 மணி நேரங்களில் உலகளாவிய கிரிப்டோ சந்தை $150 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்து உள்ளதாக Coinmarketcap நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பிற கிரிப்டோ கரன்சியின் நிலை என்ன?

கிரிப்டோ மார்க்கெட்டை பொறுத்தவரையில் நேற்று கருப்பு தினம் என்றே சொல்லவேண்டும். முக்கிய கரன்சி அனைத்தும் நேற்று பயங்கர அடியை சந்தித்தது. எந்தெந்த காயின் எவ்வளவு வீழ்ச்சியை சந்தித்தது என்பதை கீழே பார்க்கலாம்.

டாட்ஜ்காயின் - 12 சதவீதம்
ஷீபா இனு - 10 சதவீதம்
போல்காடாட் - 10 சதவீதம்
பாலிகான் - 12 சதவீதம்
XRP - 9 சதவீதம்
டெர்ரா - 1 சதவீதம்

மட்ரேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஈதுல் படேல் இதுகுறித்துப் பேசுகையில்,"ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்ததன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளாவிய சந்தை 191 சதவீதம் சரிவை சந்தித்தது. பிட் காயின், இதிரியம் உள்ளிட்ட முக்கிய கரன்சிகள் அனைத்தும் சரிவடைந்தன" என்றார்.

UKRAINE, RUSSIA, WAR, CRYPTOCURRENCY, கிரிப்டோ, உக்ரைன், ரஷ்யா, கிரிப்டோகரன்சி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்