‘பொய்.. நம்பாதீங்க’.. ரஷ்ய செய்தி நேரலையில் திடீரென பதாகையுடன் புகுந்த இளம் பெண்.. அதுல என்ன எழுதியிருக்கு? பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

செய்தி நேரலையில் போருக்கு எதிராக இளம் பெண் பத்திரிக்கையாளர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

உக்ரைன் மீது இரண்டு வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரேனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. அதனால் இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை ரஷ்யாவின் பெர்வி கானால் என்ற அரசு தொலைக்காட்சியில் நேரலை செய்தி வாசிக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது திடீரென பதாகையுடன் இளம் பெண் பத்திரிக்கையாளர் உள்ளே வந்தார். அதில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டின் தேசிய கொடிகள் வரையப்பட்டு இருந்தன.

மேலும், ‘போர் வேண்டாம், போரை நிறுத்துங்கள். போலிப் பிரச்சாரங்களை நம்பாதீர்கள். இங்கிருந்து கொண்டு உங்களிடம் பொய் சொல்கிறார்கள். ரஷ்யர்களுக்கு போரின் மீது விருப்பமில்லை’ என ரஷ்ய மொழியில் எழுதப்பட்டுள்ளது ஆங்கிலத்தில் ‘NO WAR’ என்றும் எழுதப்பட்டிருந்தது

அப்போது அந்த பெண் பத்திரிக்கையாளர் ‘போர் வேண்டாம்’ என கோஷமிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த சில வினாடிகளில் அவர் வந்த காட்சிகள் உடனே நீக்கப்பட்டது. இந்த நிலையில் அப்பெண் பத்திரிகையாளர் பெயர், மரினா ஓவ்ஸியானிகோவா என்றும், அவர் பெர்வி கானால் செய்தி ஊடகத்தில் எடிட்டராக பணியாற்றுவதும் தெரியவந்துள்ளது.

PROTEST, RUSSIA, UKRAINEWAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்