'இந்த டீலிங் எப்படி இருக்கு'!?.. ரஷ்யாவின் தடுப்பு மருந்தை... இந்தியாவில் தயாரிக்கப் போவது யார்?.. ஒப்பந்தம் இறுதியானது!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்ய நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-V கொரோனா வைரஸ் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முன்னணியில் உள்ளன. அதேவேளையில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை சோதனை செய்து வருகின்றன.
இந்நிலையில், ரஷ்ய நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-V கொரோனா வைரஸ் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் (Dr.Reddys's) நிறுவனம் இதற்காக ரஷ்ய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் இந்த தடுப்பூசிக்கான சோதனைகளை இந்தியாவில் நடத்தும். இந்த சோதனைகளுக்குப் பிறகு, இந்த தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க தொழில்நுட்பத்தை ரஷ்ய நிறுவனங்கள் அளிக்கும்.
இதன் மூலமாக இந்தியாவிலேயே 30 கோடி கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் தயாரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதிலே 10 கோடி தடுப்பூசிகள் இந்திய சந்தையில் விற்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே, ரஷ்ய தடுப்பூசி சோதனை இந்தியாவிலேயே வெற்றி பெற்றால், அதைத்தொடர்ந்து இந்தியாவில் 10 கோடி நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இப்போ தான் ஆட்டம் சூடு பிடிச்சிருக்கு'!.. ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் 'குட் நியூஸ்'!.. அதிரடி காட்டுமா சீரம் நிறுவனம்?
- 'வித்யாசமான மாஸ்க் போட்ருக்கார்னு நெனைச்சேன்.. டக்குனு திரும்பி பாத்தா..'.. பேருந்தில் சக பயணிகளை 'மிரளவைத்த' நபர்!
- 'இவங்க தான் ஆரம்பிச்சு வச்சாங்க... இப்போ இவங்களே தான் முடிக்கப் போறாங்க போல'!.. கொரோனா தடுப்பு மருந்து குறித்து... சீனா 'அதிரடி' அறிவிப்பு!
- 'என்ன பண்றது'... 'இப்படி ஏதாவது செஞ்சாதான் கேக்கறாங்க'... 'தண்டனையைக் கேட்டு பதறிப்போய்'... 'மாஸ்க் அணியும் மக்கள்!'...
- 'நெலம கைய மீறி போயிட்டிருக்கு... இனி பொறுமையா இருந்து பயனில்ல'!.. கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர கால அனுமதி வழங்கிய நாடு!.. அப்படி என்ன நடந்தது?
- 'அதிகரிக்கும் கொரோனா'... 'செப்டம்பர் 25 ந்தேதி முதல் கடுமையான ஊரடங்கா'?... மத்திய அரசு விளக்கம்!
- 'தடுப்பு மருந்தை ஊசியா போட வேணாம்'... 'இது மட்டும் ஓகே ஆனா'... 'ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்துடும்'... 'பெரும் நம்பிக்கை தரும் புது ஆய்வு!'...
- 'இத மட்டும் செய்யலன்னா'... '2024ஆம் ஆண்டு வரை கூட ஆகலாம்'... 'தடுப்பூசி விஷயத்தில்'... 'முக்கிய தகவலுடன் எச்சரித்துள்ள சீரம் சிஇஓ!'...
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- 'ஒன்னுக்கொன்னு சளைச்சதில்ல... யாரோட தடுப்பு மருந்து டாப்'!?.. கடும் போட்டியில்... 34 தடுப்பு மருந்துகள்... பில்லியன் டாலர் சந்தை யாருக்கு?.. பரபரப்பு தகவல்!