பேச்சுவார்த்தைக்கு நாங்க ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. ரஷ்யா திடீர் அழைப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஒரு நிபந்தனையுடன் ரஷ்யா அறிவித்துள்ளது.
என்ஜினியரிங் படிக்கும்போதே அந்த பழக்கம் இருந்திருக்கு.. சிவகங்கை அருகே நடந்த கொடூரம்..!
உக்ரைன்-ரஷ்யா
சோவித் யூனியன் அமைப்பில் இருந்து உக்ரைன் தனி நாடாக பிரிந்ததில் இருந்து, ரஷ்யா-உக்ரைன் இடையே மோதல் இருந்து வருகிறது. மேலும் இரு நாடுகளிடையே எல்லைப் பிரச்னையும் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் அடங்கிய ‘நேட்டோ’ அமைப்பில் இணைய உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்தது.
ரஷ்ய அதிபர்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரைனை அச்சுறுத்தும் விதமாக எல்லையில் 1 லட்சத்திற்கும் மேலான ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த சூழலில் நேற்று யாரும் எதிர்பாராதவிதமாக, உக்ரைன் மீது போர் தொடுக்க முடிவு செய்துள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். அறிவித்த சில மணி நேரங்களிலேயே கிழக்கு உக்ரைனில் ரஷ்யப் படைகள் தாக்குதலை தொடங்கின. இதனால் உக்ரைனில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 137-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வேண்டுகோள் வைத்துள்ளன.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில், உக்ரைன் நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘உக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கீழே போட்டால் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது. உக்ரைனை அடக்குமுறையிலிருந்து விடுவிக்க விரும்புகிறோம். எங்கள் நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதர தடைகளுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும்’ எனவும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
இந்த ட்விஸ்ட்டை கொஞ்சம் கூட எதிர்பார்க்கலயே.. சிஎஸ்கே தனி.. மும்பை தனி.. வெளியானது ஐபிஎல் அட்டவணை..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உக்ரைன் மீது தொடர் போரிட்ட ரஷ்ய படைகள்.. வீடியோக்களை பகிர்ந்த மக்கள்.. ட்விட்டர் தந்த அதிரடி விளக்கம்
- கிச்சன் வரை பாதிக்கும் ரஷ்யா-உக்ரைன் போர்.. இல்லத்தரசிகளுக்கு புதிய தலைவலியா?.. உயருது "முக்கிய" எண்ணெய் விலை
- "போர்ல எங்களோட நிக்க யாருமே இல்ல.. தனியா நிக்குறோம்!".. உக்ரைன் அதிபரின் நெஞ்சை பிழியும் பேச்சு
- "நாஜி படைகள் போல் தாக்கிய ரஷ்யா".. தீய பாதையில் செல்வது சரியல்ல.. உக்ரைன் அதிபர் ஆவேசம்!
- உக்ரைன் வாழ் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் .. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Russia-Ukraine Crisis: "அவங்களோட நம்பர்.1 டார்கெட் நான்தான்.. என்ன ஆனாலும் சரி".. அதிபரின் உருக்கமான வீடியோ..!
- "இந்த நூற்றாண்டோட ஹிட்லர் தான் புதின்.. இத மட்டும் அவரு பண்ணலன்னா மூன்றாம் உலக போர் கன்ஃபார்ம்.." எச்சரிக்கும் உக்ரைன் எம்.பி
- ரஷ்யா - உக்ரைன் போர்: கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டை மொத்தமாக சரித்த போர்.. உறைந்துபோன முதலீட்டாளர்கள்.!
- உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்.. "படைகளை அனுப்ப மாட்டோம்" என அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு..!
- உக்ரைன் - ரஷ்யா போர் : "மோடி மனசு வெச்சா அது நடக்கும்.. உடனே புதினுக்கு போன் பண்ணுங்க.." வேண்டுகோள் வைக்கும் தூதர்