ரஷ்ய அதிபர் புதினுக்கு 'புற்றுநோயா'?.. பெரும் சோகத்தில் நாட்டு மக்கள்!.. வெளியான பரபரப்பு தகவல்!.. உலக நாடுகள் அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து புதுப்புது அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகி வருவது ரஷ்ய மக்களை பெரும் கலக்கமடையச் செய்துள்ளது.

"புதின் சமீபகாலமாக பார்க்கின்சன் எனப்படும் மூளையின் ஒருபகுதி சிதைவுக்கு உள்ளாகும் நோயின் பிடியில் சிக்கி தவித்து வருகிறார். இந்த நோயின் காரணமாக வெளியுலகில் முகம் காட்டுவதை தவிர்த்து அவர் வருகிறார். கடந்த சில நாட்களாக கால் மற்றும் கைகளில் கடுமையான வலியால் புதின் அவதிப்படுகிறார்.

இதனால், புதின் அதிபர் பதவியில் இருந்து அடுத்த ஆண்டு விலக திட்டமிட்டு வருகிறார். அவரின் மகள்கள் மற்றும் 37 வயதான காதலியின் அறிவுறுத்தலின்பேரில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார்" என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குறித்து சில வாரங்களுக்கு முன், மாஸ்கோவை சேர்ந்த பிரபல அரசியல் விமர்சகரும், மாஸ்கோ ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான வலேரி சோலோவி தெரிவித்திருந்தார்.

இதே தகவல்களை முன்னணி ஊடகங்களும் சந்தேகத்துடன் வெளியிட்டு இருந்தன. இதற்கேற்றார்போலவே, அண்மையில் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியின் சம்பவங்கள் அமைந்தது. அந்த நிகழ்ச்சியில், நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்ட புதின், அடிக்கடி இருமி கொண்டிருந்தார்.

மேலும், நாற்காலியில் அமரும்போது கைகளில் வலி ஏற்பட்டது போல, ஓர் உணர்வுடன் அமர்ந்தார். இந்த வீடியோ காட்சிகள் முதலில் வைரலான நிலையில், பின்னர் அந்த வீடியோவை எடிட் செய்து ரஷ்யா வெளியிட அது சர்ச்சையானது.

வீடியோ பதிவைப் பார்த்தால் இதை தெரிந்துகொள்ள முடியும். அவர் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார். நாற்காலியைப் பிடித்து அமரும்போது அவர் கைகளில் வலியை உணர்வதை காணமுடிகிறது.

பேனாவை பிடித்து எழுதும்போது அவரது கைகள் நடுங்குகின்றன. இப்போது இதே வலேரி சோலோவி, இங்கிலாந்து ஊடகமான 'டெய்லி மெயில்' (Dailymail) பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் புதினுக்கு புற்றுநோய் இருப்பதாக கூறியுள்ளார்.

புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த பிப்ரவரியில் புதின் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் வலேரி சோலோவி கூறியிருப்பதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது. அதேபோல், புதினின் அடிவயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக இன்னொருவர் கூறியதாக அதேச் செய்தியில் விவரிக்கப்படுகிறது.

மேலும், இதே செய்தியில், "எனக்கு கிடைத்த தகவல் உறுதியானவை. அவருக்கு இரண்டு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒன்று பார்கின்சன் எனப்படும் உளவியல் - நரம்பியல் தன்மை கொண்டது, மற்றொன்று புற்றுநோய் பிரச்னை.

பார்க்கின்சன் நோய் புதினின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என கூற முடியாது. ஆனால், நரம்பியல் மண்டலத்தை பாதித்துள்ள இந்த நோயால் புதின் தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார்.

இதனால், பதவி விலக திட்டமிட்டிருக்கும் புதின் தனது இரண்டு மகள்களில் ஒருவரான கேடரினா டிகோனோவாவை அதிபராக்கவும் திட்டமிட்டு வருகிறார்" என்றும் வலேரி சோலோவி பேசியுள்ளார்.

உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவரான புதின் குறித்த செய்திகளையும், அவரின் நிலையையும் உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அவரின் எதிரி நாடுகளும் இந்த விவகாரங்களை கண்கொத்தி பாம்பாக இருந்து கண்காணித்து வருகின்றன.

இதற்கு முன் இதுபோன்ற பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ளன. அப்போதெல்லாம் அதனை பொய்யாக்கி இருக்கிறார்.

புதின் பதவி விலக உள்ளார் என்ற தகவலை ரஷ்யாவின் அதிபர் அலுவலகமான கிரெம்ளின் மாளிகை முற்றிலும் மறுத்துள்ளது. ஆனால், அவரின் உடல்நிலை குறித்து பேச மறுத்துவிட்டது. அதனால் என்ன நடக்கிறது என்பது அறியாமல் புலம்பி வருகின்றனர் ரஷ்ய மக்கள்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்