‘திடீர் திருப்பம்’.. போர் முடிவுக்கு வருகிறதா? ரஷ்ய அதிபர் புதின் சொன்ன முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் அதிபர் புதின் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனை அடுத்து கடந்த மாதம் 20-ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். இரு வாரத்திற்கும் மேலாக உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனாலும்
இதனிடையே ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் பொருளாதார தடைகளை அறிவித்தது. ஆனால் அதையெல்லாம் ரஷ்யா ஒரு பெரிய விஷமாக பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளிடையேயும் பதற்றம் நீடித்த படியே உள்ளது.
போர் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், மறுபக்கம் உக்ரைன்-ரஷ்யா இடையே பேச்சுவார்தைகளும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் துருக்கியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘உக்ரைன் உடனான பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் சில நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா சார்பில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பின்னர் விரிவாகப் பேசுகிறேன். அதேவேளையில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவை பலவீனப்படுத்தாது. அது வலுவானதாகவே மாறும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்’ என புதின் கூறியுள்ளார். அதனால் விரையில் போர் முடிய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்னது உக்ரைனுக்கு ஆதரவாக இவர் களத்துல இறங்கிட்டாரா.. அப்பவே வேறலெவல் சம்பவம் பண்ணவராச்சே..!
- "உக்ரைன்-ல அந்த குண்டை யூஸ் பண்ணோம்னு ரஷ்யா கன்ஃபர்ம் பண்ணிடுச்சு ".. பிரிட்டன் பாதுகாப்புத்துறை போட்ட பரபரப்பு ட்வீட்..!
- "தப்பு கணக்கு போட்டுட்டீங்க".. புது குண்டை தூக்கிப்போட்ட புதின்.. பரபரப்பில் உலக நாடுகள்..!
- "தலைநகருக்கு உள்ள வந்துடுச்சு அந்த க்ரூப்.. தயாரா இருங்க"..உக்ரைன் அதிபருக்கு உளவுத்துறை அனுப்பிய சீக்ரட் மெசேஜ்..!
- இங்கிலாந்து ராணியின் பாதுகாப்பு படையில் இருந்து எஸ்கேப் ஆன வீரர்.."அத மட்டும் அவர் செஞ்சா அவ்ளோதான்".. கவலையில் பிரிட்டன்..!
- ரூ.76 கோடி கொடுத்த ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோ! உக்ரைனுடன் இப்படி ஒரு பந்தம் இருக்கா? நெகிழவைக்கும் பின்னணி!
- "நாங்க சிரிச்சிட்டே தான் இருக்கோம்.." போரில் மாய்ந்து போன பிரபல நடிகர்.. கடைசி பதிவால் உடைந்து போன ரசிகர்கள்
- "எதிர்காலத்துல என்ன வேணா நடக்கலாம்.. அது ஒன்னு தான் நமக்கு இருக்குற ஒரே வழி".. இந்திய ராணுவ ஜெனரல் பரபரப்பு தகவல்..!
- செல்லப் பிராணிகளால் உக்ரைனை விட்டு வர மறுக்கும் இந்திய மருத்துவர் –இதுதான் காரணமா?
- "இந்திய ராணுவத்தில் இடம் கிடைக்கல.." உக்ரைனில் பயின்று வந்த தமிழக மாணவர்.. பெற்றோருக்கு தெரிய வந்த தகவலால் அதிர்ச்சி