'அய்யயோ..! எல்லாரும் ஓடுங்க, கொரோனா வைரஸ் வருது...!' ஹாயா ஜம்முன்னு உட்கார்ந்திட்டு இருக்கீங்களா, இப்ப பாருங்க...! பயணிகளை 'தெறிக்க' விட்ட நபருக்கு என்ன தண்டனை தெரியுமா...?
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவில் சுரங்க ரெயிலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர் போல் நடித்து பயணிகளை சிதறடித்து ஓட செய்த நபருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவில் ஹரொமெட் டஸ்புரோவ் என்ற நபர் சமூக வலைதள பக்கத்தில் அதிக 'லைக்’குகள் வர வேண்டும் என்பதற்காக மிகவும் ஆபத்தான வேலையில் இறங்கியுள்ளார். அவர் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து மாஸ்கோ சுரங்க ரெயிலில் ஏறியுள்ளார். தனது முகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அணிவது போன்ற முகமூடியை அணிந்துகொண்டு ரெயிலில் பயணம் செய்துள்ளார். டஸ்புரோவின் நடவடிக்கைகளை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் பயணிகள் அதிகம் இருந்த இடத்திற்கு வந்த அவர் திடீரென மயங்கி விழுந்து, வலிப்பு வருவது போல நடித்துள்ளார். உடனடியாக அவரது நண்பர்கள் பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 'கொரோனா வைரஸ், கொரோனா வைரஸ்’ என கூச்சலிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் தங்களுக்கும் வைரஸ் பரவிவிடும் என்ற அச்சத்தில் ரெயில் அடுத்த நிலையத்தை அடைந்த உடன் அதில் இருந்து அலறியடித்துக்கொண்டு ரெயிலை விட்டு வெளியேறி வேகமாக ஓடினர். ஆனால், இது ஒரு 'பிராங் வீடியோ’ என தெரிந்த பின்னர் பயணிகள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துதல், பயணிகளுக்கு தொல்லை கொடுத்த உள்ளிட்ட குற்றங்களில் வழக்கு பதிவு செய்து டஸ்புரோவை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அடுத்த விசாரணை வரும் வரை டஸ்புரோவை ஒரு மாதம் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. போலீசார் பதிவு செய்துள்ள குற்றப்பிரிவுகளில் அடிப்படையில் டஸ்புரோவுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவங்களும் லீவ் இல்லாம வொர்க் பண்ணிட்டே இருக்காங்க, அதனாலதான்...' 'நர்ஸ் மாதிரி தான் நல்லாவே பார்த்துக்குறாங்க...!' கொரோனா தொற்று ஏற்படுவதால் நர்ஸ் ரோபோக்கள்...!
- 'ஆரம்பத்துல சொன்னதுக்காக புடிச்சு ஜெயில்ல போட்ருக்காங்க...' 'கொரோனாவ' முதல்ல கணிச்சவரே இவரு தான்...., இப்போ அவரோட நிலைமை என்ன தெரியுமா ...?
- நானும் 'அவர' கூட்டிட்டு சீனா போகப் போறேன்...! ‘சொந்தக்காரங்க யாருமே என் கல்யாணத்துக்கு வரல...’ கொரோனா போச்சுன்னா ‘குடும்பத்தோட’ இன்னொரு கல்யாணம்...!
- யாரா இருந்தாலும் எங்க 'மண்ணுல' கால் பதிக்க விட மாட்டோம்...! நடுக்கடலில் தவித்த 'வைர அரசி'.. கொரோனாவின் அட்டூழியம்...!
- குண்டூர் மிளகாய்க்கே கொடுத்த 'காரமான' நியூஸ்..! 'கொரோனா' வைரஸ்னா சும்மாவா...! தேஜாவுக்கும் சேர்த்து வைத்த ஆப்பு...!
- சீனாவிலிருந்து வந்த தமிழக பரோட்டா மாஸ்டருக்கு கொரோனா...? 'டெஸ்டுக்காக புனே அனுப்பி வச்சிருக்கோம்...' தீவிர கண்காணிப்பு...!
- உங்களுக்கு 'கொரோனா' இருக்கா இல்லையா..? அரை மணி நேரத்துல 'கரெக்ட்டா' சொல்லிடும்...! இனிமேல் வைத்தியம் பார்க்க போறதும் ஆன்லைன்ல தான்...!
- 'இந்த மருந்தை சாப்பிட்டால் உடனடியாக...' 'பாட்டி கூறிய 11 வகை மூலிகைககள் கொண்டு...' கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்த தமிழக மாணவர்...!
- 'கொரோனா' வைரஸ் தாக்கப்பட்ட சீன நபர் சென்னையில்...? 'மலேசியா வழியாக வந்ததாகவும்...' தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி...!
- 'பாவம் இல்ல...! அவங்களுக்கும் 'ஒண்ணு' கொடுங்க...' அவங்களும் நம்ம 'புள்ளிங்கோ' தானே...! மருத்துவமனைகளில் குவியும் கூட்டம்...!