எவ்ளோ பெரிய பள்ளம்...! 'இது முதல் தடவ இல்ல...' எப்படி இது உருவாச்சு...? - அதிர்ச்சியில் உறைந்த விஞ்ஞானிகள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யாவில் 9-வது முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பள்ளம் ரஷ்யநாட்டு விஞ்ஞானிகள் மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பல மர்மமான பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை எதனால் உருவானது, எப்படி உருவானது என பல விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், மீண்டும் ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் மர்ம பள்ளம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தொலைக்காட்சிக் குழுவினர் சிலர் சைபீரியாவில் உள்ள தந்த்ரா பகுதியில் சுமார் 100 அடி ஆழமும், 70 அடி விட்டமும் கொண்ட பிரமாண்டமான பள்ளம் ஒன்றினைப் படம் பிடித்தனர். இந்த பள்ளம் கடந்த 2013-ம் ஆண்டு முதல் கண்டுபிடிக்கப்பட்ட 9-வது பள்ளம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும், விண்கல் விழுந்ததால் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், பறக்கும் தட்டுக்கள் தரையிறங்கியிருக்கலாம் என்றும், நிலத்தடி ராணுவ ரகசிய அறைகள் இருக்கலாம் என்ற கருத்தும் பரவலாக பரவி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் மீத்தேன் வாயு வெடிப்பினால் இந்தப் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்ற நோக்கிலும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வினை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்