பாம்களுக்கெல்லாம் அப்பன் இந்த vacuum bomb.. உக்ரைன் மீது ரஷ்யா வீசிய குண்டு பற்றி தெரியுமா?.. அதிரவைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் நாட்டின் கருப்பு தினமாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். ரஷ்ய பாராளுமன்றத்தில் உக்ரைனில் ராணுவ தாக்குதல் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. ரஷ்ய பாராளுமன்றத்தில் ஏக மனதாக இந்த கோரிக்கை ஏற்கப்படவே, உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின். இதனை தொடர்ந்து அண்டை நாடான பெலாரசில் குவித்து வைக்கப்பட்டு இருந்த ஒன்றரை லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைனுக்குள் நுழைந்தனர்.
இன்று கொண்டாடப்படும் மஹாசிவராத்திரி.. அப்படி என்ன ஸ்பெஷல் இந்த நாளில்..?
ரஷ்யாவே பொறுப்பு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை உலக நாடுகள் பலவும் கண்டித்து வருகின்றன. இந்தப் போரினால் ஏற்படும் விளைவுகள் அனைத்திற்கும் ரஷ்யாவே காரணம் என குற்றம் சாட்டியிருந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அதேபோல, இங்கிலாந்தின் அதிபர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் போன்ற தலைவர்களும் ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
ஆயுதம் தருகிறோம்
ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, தற்காத்துக்கொள்ளும் விதமாக ஆயுதம் ஏந்தியது உக்ரைன். இந்த போரில் பங்கு பெறுபவர்களுக்கு ஆயுதம் வழங்கப்படும் என்றும் உலக நாடுகள் தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் உக்ரைன் அதிபர் வொலோடிமர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து ரஷ்ய படைகளின் முன்னேற்றத்தை தடுக்க பல்வேறு தற்காப்பு தாக்குதலை உக்ரைன் அரசு முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், பல்வேறு உலக அமைப்புகளால் தடை செய்யப்பட்ட வேக்கம் குண்டுகளை (vacuum bomb) உக்ரேன் மீது ரஷ்யா வீசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அது என்ன vacuum bomb? விரிவாக பார்க்கலாம்.
ரஷ்யாவின் ஆயுதங்களில் (அணு ஆயுதங்கள் தவிர்த்து) மிக மோசமானவற்றுள் ஒன்றாக கருதப்படும் இந்த vacuum bomb பேரழிவை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இதன் காரணமாகவே "ரஷ்ய பாம்களின் தந்தை" என இந்த வகை குண்டுகள் அழைக்கப்படுகின்றன. வழக்கமாக தெர்மோபாரிக் ராக்கெட்டுகள் மூலமாக குறிப்பிட்ட இடத்திற்கு இந்த vacuum bomb வீசப்படும்.
பேரழிவு
சுமார் 600 மீட்டர் விட்டத்திற்கு இந்த வகை குண்டுகள் தாக்கத்தினை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. ஒரு vacuum bomb ஏற்படுத்தும் அழிவு 44 டன் TNTஏற்படுத்தும் அழிவிற்கு சமம் என்கிறார்கள் ஆயுத நிபுணர்கள்.
இவை எந்த இடத்தில் வெடிக்க வைக்கப்படுகிறதோ அங்குள்ள ஆக்சிஜனை துரிதமாக வெளியேற்றிவிடும். இதனால் நுரையீரல்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, மனிதர்களின் உள் உறுப்புகளை மிக மோசமாக சேதப்படுத்தும் எனவும் இதனால் மனிதர்களின் செவிப் பறை மோசமாக சிதைவடையும் என எச்சரித்து இருக்கிறது அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ.
அமெரிக்காவிற்கு போட்டி
அமெரிக்காவின் மிகவும் ஆபத்தான GBU-43 என்ற வகை குண்டிற்கு போட்டியாக ரஷ்யா இந்த vacuum bomb ஐ தயாரித்தது. அமெரிக்காவின் GBU-43 யும் அணு ஆயுதங்கள் தவிர்த்த ஆயுதங்களில் மிக மோசமான விளைவை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் GBU-43 ஐ "பாம்களின் தாய்" என அமெரிக்கா அழைக்கிறது. 2017 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இந்த குண்டை அமெரிக்கா வீசியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பாம்களின் தாய்க்கு எதிராக ரஷ்யா தயாரித்த vacuum bomb ற்கு ரஷ்ய ஆயுதங்களின் தந்தை என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராக எழுந்த உள்நாட்டு போரில் அரசுக்கு ஆதரவாக களமிறங்கிய ரஷ்யா அங்கே 2016 ஆம் ஆண்டு இந்த தெர்மோபாரிக் ராக்கெட்களை ஏவியது குறிப்பிடத்தக்கது. மேலும், செச்சன்யா பகுதியிலும் இந்த ராக்கெட்களை கொண்டு ஏற்கனவே தாக்குதல் நடத்தி இருக்கிறது ரஷ்யா.
இந்நிலையில், உக்ரைனின் வடக்குப் பகுதியில் வேக்கம் குண்டினை ரஷ்யா நேற்று வீசியதாக அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்சனா மார்க்கரோவா தெரிவித்திருப்பது உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆமா.. உக்ரைன் சொன்னது உண்மைதான்’.. முதல் முறையா அந்த விஷயத்தை ஒப்புக்கொண்ட ரஷ்யா..!
- ஒரு பக்கம் பேச்சுவார்த்தைன்னு சொல்லிட்டு.. சைலண்டா ரஷ்யா செய்யும் வேலை.. அதிர்ச்சியை ஏற்படுத்திய செயற்கைக்கோள் போட்டோ..!
- Russia-Ukraine war: களத்தில் இறங்கிய கூகுள் .. ரஷ்யாவுக்கு பெரிய செக்.. திடீரென போட்ட அதிரடி கண்டிஷன்..
- Ukraine Russia War: "ரஷ்யாவுக்கு எதிராக தேவைப்பட்டால் துப்பாக்கியை எடுப்பேன்".. உக்ரைன் பெண் எம்.பி. அதிரடி
- Ukraine Russia War: "போர் முடிவுக்கு வரணும்".. உக்ரைனின் அமைதிக்காக கடவுளிடம் மன்றாடும் போப் பிரான்சிஸ்
- அதிரடி செக்! இனி இந்த 13 நாடுகள் வழியா ரஷ்ய விமானம் பறக்க முடியாது - சூடு பிடிக்கும் உலக அரசியல் சதுரங்கம்!
- Russia-Ukraine War: .. கதிகலங்கி நிற்கும் உக்ரைன்.. ஜப்பான் தொழிலதிபர் செய்த உருக்கமான காரியம்..
- "பேச்சுவார்த்தைக்கு தயார்.." ரஷ்யா வைத்த கோரிக்கை.. உக்ரைன் போட்ட தடாலடி கண்டிஷன்..
- Russia-Ukraine War: "என்ன ஆனாலும்.. என் செல்லக் குட்டிய விட்டு போக மாட்டேன்.. " அடம்பிடிக்கும் இந்திய மாணவர்.. நெகிழ்ச்சி பின்னணி
- "300 பேருக்கும் ஒரே ஒரு பாத்ரூம் தான்".. "உயிர் பயத்தை விட".. நாட்டையே உலுக்கிய 'உக்ரைன்' தமிழ் மாணவியின் வீடியோ