‘போரை உடனே நிறுத்துங்க’.. ரஷ்ய ராணுவத்துக்கு புதின் அதிரடி உத்தரவு.. திடீர் அறிவிப்பின் பின்னணி இதுதானா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் நாட்டில் போர் உச்சமடைந்துள்ள நிலையில் ரஷ்யா முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

உக்ரைன் மீது ஒரு வாரத்துக்கும் மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறதூ. அதன்படி கீவ், கார்கிவ் என உக்ரைனின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

இந்தப் போரால் உக்ரைன் வான்வழி கடந்த 10 நாட்களாகவே மூடப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வெளிநாட்டினர் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகள் வழியாகத் தாயகம் அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.

அதேபோல் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள நகரங்களில் வசிக்கும் இந்தியர்களால் அண்டை நாடுகளுக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் இந்தியர்களை மீட்க ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்தியர்கள் வெளியேறும் வகையில் ராணுவ நடவடிக்கை இல்லாத சிறப்பு வழித்தடத்தை (humanitarian corridor) உருவாக்குவது தொடர்பாகப் பரிசீலனை செய்து வருவதாகச் சமீபத்தில் ரஷ்யாவுக்கான இந்திய தூதர் அலிபோவ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் உக்ரைன் மீதான போரைத் தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்கள் வெளியேற வழிவகை செய்ய மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ரஷ்யா விளக்கமளித்துள்ளது. இந்த நேரத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டினர், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தற்காலிக போர் நிறுத்தம் இன்னும் எவ்வளவு நேரம் அமலில் இருக்கும் என்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RUSSIA, UKRAINE, RUSSIANUKRAINIANWAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்