உக்ரைன் மேல ரஷ்யா வான்வழி தாக்குதல் மட்டும் நடத்தல.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைனின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றன.

Advertising
>
Advertising

குண்டு மழை பொழியும் ரஷ்யா.. பாதுகாப்புக்காக கூட்டம் கூட்டமாக உக்ரைன் மக்கள் செல்லும் இடம்..!

உக்ரைன்-ரஷ்யா

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இது பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்றும், உக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை

மேலும் உக்ரைன் ராணுவம் தனது ஆயுத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ள புதின், ரஷ்ய நடவடிக்கைகளால் ஏற்படும் ஏராளமான உயிரிழப்புகளுக்கு உக்ரைன் ஆட்சியாளர்களே பொறுப்பு என்று புதின் கூறியுள்ளார். ரஷ்ய நடவடிக்கையில் தலையிடும் எந்தவொரு நாடும் ‘அவர்கள் பார்த்திராத விளைவுகளை’ சந்திக்க நேரிடும் என்று புதின் எச்சரித்துள்ளார்.

உக்ரைன்

புதின் உத்தரவைத் தொடர்ந்து உக்ரைன் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான தாக்குதல்களை ரஷிய படைகள் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான உக்ரைன் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சைபர் தாக்குதல்

இந்த நிலையில் உக்ரைன் மீது சைபர் தாக்குதலையும் ரஷ்யா தொடுத்துள்ளது. உக்ரைனைச் சேர்ந்த அரசு இணையதளங்களையும், உக்ரைனின் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதளங்கள், உக்ரைன் அமைச்சர்களின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டு முடக்கியுள்ளது. மேலும் உக்ரைனின் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதளங்களின் தகவல்களை தகவல் அழிப்பு, டூல் மால்வேர் மூலம் அழித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

‘உக்ரைன் விவகாரம்’.. இது நடந்தா முழுக்க முழுக்க ரஷ்யா தான் பொறுப்பு ஏத்துக்கணும்.. ஜோ பைடன் பரபரப்பு தகவல்..!

RUSSIA, CYBER-ATTACKS, UKRAINE WEBSITES, GOVERNMENT, உக்ரைன், ரஷ்யா, ரஷ்யா வான்வழி தாக்குதல், உக்ரைன்-ரஷ்யா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்