'கொரோனா தடுப்பு மருந்தா!?.. அது எங்க ஊரு மருந்து கடையிலயே கிடைக்கும்!'.. அதிர்ந்து போன உலக நாடுகள்!.. முடிகிறதா கொரோனாவின் சகாப்தம்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகிலேயே முதன் முறையாக ரஷ்யா தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் -வி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

மாஸ்கோவில் உள்ள மருந்துக் கடைகளில் தடுப்பு மருந்து விநியோகம் செய்யப்படுகிறது. முதல்கட்டமாக வயதானவர்கள், முன் களப்பணியாளர்களுக்கு மருந்தை செலுத்த உள்ளதாக ரஷ்ய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அவசரமாக மருந்தைத் தயாரித்ததாக ரஷ்யா மீது விமர்சனங்கள் எழுந்த போதும், Sputnik V மருந்து பாதுகாப்பானது என்று பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு ரஷ்யா அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மனித பரிசோதனைகள் தற்போது ரஷ்யாவில் நடைபெற்றுவருகிறது. அதில் சுமார் 40,000 பேர் பங்கேற்றுள்ளனர்.

அவற்றின் முடிவுகள் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பாக இப்போது இருந்தே ஸ்புட்னிக்-வி,  மருந்துக்கடைகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ரஷ்ய அரசு, Sputnik V மருந்து மீது வைத்திருக்கும் அதீத நம்பிக்கை தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்