"கொரோனா 'தடுப்பூசி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!" - 'கில்லி'யாக சொல்லியடிக்கும் 'ரஷ்யா'...! - மகிழ்ச்சியில் மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய ராணுவம், மாஸ்கோவில் உள்ள கமலேயா (Gamaleya) நிறுவனம் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

இதன் இரண்டாம் கட்ட சோதனையில் பங்குபெற்ற இரண்டாவது குழுவினர், கடந்த திங்களன்று பரிசோதனையை நிறைவு செய்ததாகவும், அவர்களுக்கு கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தி் உருவாகி இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பு மருந்தை கொடுத்து நடைபெறும் மூன்றாம் கட்டச் சோதனை ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் என்றும், செப்டம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்