8 வருஷத்துக்கு அப்பறம் அந்த ஆயுதத்தை வெளியே எடுத்துருச்சு ரஷ்யா.. ஷாக்கில் உலக நாடுகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்நேட்டோ அமைப்புடன் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்து இருந்த நிலையில், அதனை கடுமையாக எதிர்த்து வந்தது ரஷ்யா. இதனை அடுத்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துவரும் வேளையில் தனது ஏவுகணை தடுப்பு ஆயுதமான S-400 -ஐ பயன்படுத்த வீரர்களுக்கு பயிற்சி அளிக்க துவங்கியுள்ளது ரஷ்யா. இது ஐரோப்பிய யூனியன் மட்டும் அல்லாது பல நாடுகளை கவலை கொள்ள செய்திருக்கிறது.
வலுக்கும் எதிர்ப்பு
"உக்ரைன் விவகாரத்தில் தலையிடும் நாடுகள் வரலாற்றில் சந்திக்காத விளைவை சந்திக்க நேரிடும்" என ரஷ்ய அதிபர் புதின் கடந்த வாரம் எச்சரித்து இருந்தார் இருப்பினும் நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு உதவி வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுதங்களை மேற்குலக நாடுகள் வழங்கி வரும் வேளையில் S-400 ஆயுதத்தை ரஷ்யா வெளியே எடுத்து இருப்பது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
S-400
S-400 என்பது ஒரு இடம் பெயரக்கூடிய தடுப்பு தாக்குதல் அமைப்பாகும். வான் வெளியிலேயே குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளை இதன் மூலம் வீழ்த்த முடியும். இது உலகின் மிகவும் ஆபத்தான ஒன்றாக கருதப்படுகிறது. போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் அல்லது ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVகள்) என 400 கிமீ தூரம் வரை பல இலக்குகளை இந்த ஆயுதத்தால் வீழ்த்த முடியும்.
இதில் அமைந்துள்ள அதிநவீன ரேடார்கள் மூலமாக இலக்குகளை துல்லியமாக கண்டறிந்து அவற்றை தாக்கி அழிக்க முடியும். இந்த ஆயுதத்தினை கொண்டு பெரிய நகரங்களின் வான் பரப்பை பாதுகாப்பது சுலபம்.
இந்த ஏவுகணை தடுப்பு அமைப்பானது இயக்கப்படும் தூரத்தினைக் கொண்டு சில பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அதாவது, குறுகிய தூரம் 40 கிமீ, நடுத்தர தூரம் 120 கிமீ, நீண்ட தூரம் 180 கிமீ மற்றும் மிக நீண்ட தூரம் 400 கிமீ என நான்கு வகைகளில் இந்த அமைப்பை பயன்படுத்தலாம். இந்த ஆயுதத்தின் மூலம் 400 மற்றும் 600 கிமீ வரையில் இலக்குகளை கண்காணிக்கும் வசதிகள் தற்போது அமைக்கப்பட்டு உள்ளன.
600 கிமீ வெர்ஷனில் 160 இலக்குகளையும் 400 கிமீ வெர்ஷனில் 72 இலக்குகளையும் இதன் மூலம் குறிவைக்க முடியும். 2007 ஆம் ஆண்டு முதன்முதலில் இந்த ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்த துவங்கியது. கடைசியாக 2014 ஆம் ஆண்டு கிரிமியா பகுதியில் இந்த ஆயுதத்தை ரஷ்யா உபயோகித்தது. இந்த ஆயுதத்தின் அப்கிரேட் வெர்ஷன்களான S-300, S-200 ஆகியவற்றையும் ரஷ்யா வைத்து இருக்கிறது. 600 கிமீ தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கும் S-500 -ஐ அந்நாடு தயாரித்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து S-400 ஐ இந்தியா வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி
இந்த அதிநவீன ஏவுகணை தடுப்பு அமைப்பில் இருக்கும் வீரர்களை "Triumf" என்கிறார்கள். இவர்கள் தற்போது தெற்கு ரஷியாவின் சைபீரியா எல்லை பகுதியான நோவாசிபிரஸ்க் பகுதியில் பயிற்சியை துவங்கி உள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உக்ரைனில்.. செய்தி ஒளிபரப்பின் போது வெடித்த குண்டு.. "அப்படியே மின்னல் மாதிரி இருந்திச்சு.." பதறி நடுங்கிய பத்திரிக்கையாளர்
- சண்டை ஒரு பக்கம் நடந்திட்டு இருக்கு.. சைலண்டா ரஷ்யா போடும் மாஸ்டர் ப்ளான்?.. இது யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!
- Russia – Ukraine Crisis: "ரஷ்யாவில் எங்களது ஓடிடி இயங்காது".. பிரபல நிறுவனம் பரபரப்பு அறிவிப்பு..!
- புதின் தலைக்கு விலை.. ரஷ்ய தொழிலதிபர் செய்த காரியம்..என்ன நடக்கப்போகுதோ..?
- உக்ரைன் விவகாரம் எதிரொலி.. ரஷ்ய அமைச்சர் பேச ஆரம்பிச்சதும் நடந்த சம்பவம்.. ஐநா சபையில் நடந்த ஷாக்..!
- மனிதம் இன்னும் சாகல.. உக்ரைன் மக்கள் செஞ்ச காரியம்.. கண்ணீர் விட்டு அழுத ரஷ்ய வீரர்..!
- "ரயில் ஏற விட மாட்டேங்குறாங்க.. துப்பாக்கியை காட்டி மிரட்டுறாங்க".. உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள் கதறல்..!
- "ட்ரைனிங் னு சொல்லி தான் கூட்டிட்டு வந்தாங்க".. உக்ரைனில் பிடிபட்ட ரஷ்ய வீரர் போட்டுடைத்த உண்மை..!
- நெஞ்சை பிடிச்சுகிட்டு உக்கார்ந்த இளைஞர்.. உக்ரைனில் இரண்டாவது இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்..!
- ‘என் மகன் 97% மார்க் வாங்கியிருக்கான்’.. மத்திய அமைச்சரின் சர்ச்சை கருத்து.. உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் தந்தை பதில்..!