உலகின் முதல் கொரோனா 'தடுப்பூசி' தயாரிப்பில் தீவிரம் காட்டும் நாடு... எப்போது சந்தைக்கு வரும்?... வெளியான புதிய தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யா Sputnik V என்னும் கொரோனா தடுப்பூசியைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

உலகத்தின் முதல் கொரோனா தடுப்பூசியை தயாரித்து இருப்பதாக ரஷ்யா பெருமையுடன் அறிவித்துள்ளது. ஆனால் இது மனித பரிசோதனைகளை முழுமையாக மேற்கொள்ளவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் முதல் தடுப்பூசி என்னும் பெருமை கிடைக்க ரஷ்யா அவசர கதியில் தடுப்பூசி தயாரிப்பை தொடங்கி விட்டதாக பல்வேறு நிறுவனங்களும் குற்றஞ்சாட்டி இருக்கின்றன.

இந்த நிலையில் ரஷ்யா Sputnik V என்னும்  தடுப்பூசி தயாரிப்பைத் தொடங்கிவிட்டதாகவும், இந்த மாத (ஆகஸ்ட்) இறுதியில் தடுப்பூசி சந்தைக்கு வரத் தொடங்கும் எனவும் ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துவிட்டதாக இண்டெர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது 9 தடுப்பூசிகள் மனித பரிசோதனை செய்யப்பட்டு  வருவதாகவும் ஆனால், அதில் ரஷ்யா இடம்பெறவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்