உங்களுக்கு 'தில்' இருக்கா...? 'இல்லன்னா திரும்பி பார்க்காம போய்கிட்டே இருங்க...' '13 மூவீஸ் பார்த்து பணத்த அள்ளிட்டு போகலாம்...' - லிஸ்ட்ல 'என்னெல்லாம்' படங்கள் இருக்கு...?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் ஃபைனான்ஸ்பஸ் என்ற நிதி நிறுவனம் 13 பயங்கரமான பேய் படங்களை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு சுமார் 1,300 டாலர் ( 95ஆயிரம் ரூபாய்) பரிசாக அளிக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஃபைனான்ஸ்பஸ் என்ற நிறுவனம் 'ஹாரர் மூவி ஹார்ட் ரேட் ஆய்வு' என ஒரு போட்டியை அறிவித்துள்ளது. அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தொடர்ந்து 10 நாட்களில் 13 பயங்கரமான திரைப்படங்களைப் பார்க்க வேண்டும். அப்போது பார்ப்பவர்களின் இதய துடிப்பு ஃபிட்பிட்டைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படுமாம்.

இதுகுறித்து கூறிய ஃபைனான்ஸ்பஸ் என்ற நிறுவனம், 'குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படத்தை விட, அதிக பட்ஜெட் எடுக்கப்படும் திகில் திரைப்படங்கள் திரையரங்குகளில் பார்க்கும் பார்வையாளர்களுக்கு அதிகமாக பயத்தை ஏற்படுத்துகிறதா, இல்லையா என்பதை அறியவே இதுபோன்ற ஒரு போட்டியை நாங்கள் அறிவித்துள்ளோம். இந்த போட்டிகளின் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்' எனக் கூறியுள்ளார்.

அதோடு இந்த போட்டிக்கான அனைத்து திரைப்படங்களின் வாடகை செலவுகளையும் ஈடுசெய்ய FitBit நிறுவனம் $ 50 தொகையை பங்கேற்பவர்களுக்கு வழங்கும். ஹாரர் ஃபெஸ்ட் பார்க்கும் பட்டியலில் உள்ள 13 திரைப்படங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

அவை,

Saw,

Amityville Horror,

A Quiet Place,

A Quiet Place Part 2,

Candyman, Insidious.

The Blair Witch Project.

Sinister,

Get Out,

The Purge,

Halloween (2018),

Paranormal Activity,

Annabelle

இந்த படங்களை பார்ப்பவர்கள் கண்டிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற தகுதியையும் ஃபைனான்ஸ்பஸ் நிறுவனம் கூறியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்