என் 'கேமராவ' மட்டும் எடுத்திட்டு கெளம்புறேன்...! இனிமேல் என் 'மண்ண' பார்க்க முடியாது இல்ல...? - வேதனையோடு 'கண்ணீர்' வடிக்கும் பத்திரிக்கையாளர்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாய் நாடான ஆப்கானில் இருந்து வெளியேறுவது மிகவும் கடினமாக உள்ளது என திரைப்படத் தயாரிப்பாளர் ரோயா ஹெய்தாரி கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் முழுமையாக தாலிபான் பிடியில் சென்றுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக குடியேறி வருகின்றனர்.

ஆப்கானில் மத அடிப்படைவாத அமைப்பான தாலிபான் இதற்கு முன் ஆட்சியில் இருக்கும் போது, பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களையும், சுதந்திரம் அளிக்காத அமைப்பாகவும், குறிப்பாக பெண்களுக்கு அதிகளவில் கட்டுப்பாடுகளை விதித்து அவர்களின் முழு சுதந்திரத்தையும் பறித்தது.

இந்நிலையில், தற்போது 20 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தாலிபான் ஆப்கானிஸ்தானில் தலைதூக்கியுள்ள நிலையில் அங்கிருக்கும் மக்கள் தங்கள் உயிருக்கும், உடமைக்கும், தனிமனித சுதந்திரத்திற்கும் பயந்து தாய்நாட்டை விட்டு கிளம்பி வருகின்றனர்.

தாலிபான் 'இஸ்லாமிய ஷரியத் சட்டம்' எல்லைக்கு உட்பட்டு பெண்களின் உரிமைகள் பறிக்கப்படாது என கூறினாலும் தாலிபானின் செயல்கள் அதிருப்தியை அளிக்கின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளரும் புகைப்படப் பத்திரிகையாளருமான ரோயா ஹெய்தாரி என்பவர் தாய்நாட்டிலிருந்து வெளியேறினார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவையும் புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்.

அதில், 'நான் என்னுடைய நிலத்தையும் அடையாளத்தையும், முழு வாழ்க்கையையும் விட்டுவிட்டு, மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக என் வீட்டை விட்டு வெளியேறினேன்.

இப்போது மீண்டும், நான் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கப் போகிறேன். என் கேமரா மற்றும் உயிரற்ற ஆன்மாவை மட்டும் எடுத்துக்கொண்டு செல்கிறேன். கனத்த இதயத்துடன், தாய் நாட்டிலிருந்து விடைபெறுகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரோயா ஹெய்தாரி பெண் என்பதால் அவரை தாலிபான்கள் வேலை செய்ய அனுமதிக்கமாட்டார்கள் என்ற அச்சத்தால் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்