மக்களுடன் தலைகீழா தொங்கிய ரோலர் கோஸ்டர்.. Prank-னு நெனச்சவங்களுக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் இயந்திர கோளாறு காரணமாக ரோலர் கோஸ்டர் ஒன்று தலைகீழாக தொங்கியபடி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | மேகத்துல பட்டு தெறித்த பிரம்மாண்ட கடல் அலை.. உண்மையை உடைத்த ஆராய்ச்சியாளர்கள்..வைரல் வீடியோ..!

அமெரிக்காவின் நார்த் கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ளது காரோவின்ட்ஸ் அம்யூஸ்மெண்ட் பார்க். இங்குள்ள ஃபிளையிங் கோப்ரா என்னும் ரோலர் கோஸ்டரில் கடந்த வெள்ளிக்கிழமை பயணித்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ரோலர் கோஸ்டர்

மணிக்கு 50 மைல் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ரோலர் கோஸ்டர் 360 டிகிரி கோணத்தில் திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இதில் பயணிப்பதற்காக மக்கள் சிலர் ஏறியுள்ளனர். ஆர்வத்துடன் மக்கள் காத்திருக்க பயணமும் கிளம்பியிருக்கிறது. ரோலர்கோஸ்டர் கிளம்பிச் சென்றபோது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. சரியாக ரோலர் கோஸ்டர் தலைகீழாக திரும்பிய நிலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று நின்றுவிட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

விரைவில் இது சரி செய்யப்படும் என அவர்கள் நினைத்திருந்த வேளையில், கீழே இருந்த கட்டுப்பாட்டு அதிகாரிகள் அந்த கோளாறை சரிசெய்ய 45 நிமிடங்கள் பிடிக்கும் என தெரிவித்தது அவர்களை மேலும் அதிர வைத்திருக்கிறது.

தலைகீழாக

இது குறித்து பேசிய இந்த ரோலர் கோஸ்டரில் பயணித்த ஆலன் பிராண்டன் என்பவர்," ரோலர் கோஸ்டர் உச்சிக்குச் சென்று தலைகீழாக திரும்பியவுடன் திடீரென்று நின்றுவிட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது நிகழ்ந்து இருப்பதாகவும், விரைவில் சரி செய்யப்படும் எனவும் அதிகாரிகள் கூறியதைக் கேட்க முடிந்தது. ஆரம்பத்தில் ஏதோ விளையாட்டுக்காக இப்படி செய்கிறார்கள் என்று நினைத்தோம். ஆனால் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் தலைகீழாக தொங்கியபடி நாங்கள் அந்த ரோலர் கோஸ்டரில் காத்திருந்தோம்" என்றார்.

ஆலன் பிராண்டன் தனது அனுபவத்தைப் பற்றி மேலும் பேசும்போது "என் வாழ்க்கையில் முதல்முறையாக இப்படி நிகழ்ந்திருக்கிறது. நான் என்னுடைய கண்ணீர் துளிகள் கீழே விழுவதை வானத்தில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன். நான் மிகவும் பதட்டத்துடன் அப்போது இருந்தேன். எனது அருகில் இருந்த சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த சூழ்நிலை மிகவும் பயங்கரமாக இருந்தது" என்றார்.

சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு, ரோலர் கோஸ்டரில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்த பார்க் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

ROLLERCOASTER, US, STUCK RIDERS, ரோலர் கோஸ்டர், இயந்திர கோளாறு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்