இரண்டாம் உலகப்போர்ல ஹிட்லரிடம் இருந்து தப்பிக்க போர்வீரருக்கு உதவிய வாட்ச்.. சூடுபிடித்த ஏலம்.. இவ்வளவு விலையா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இரண்டாம் உலகப்போரின் போது, ஹிட்லரின் முகாமில் இருந்து பிரிட்டிஷ் வீரர்கள் தப்பிக்க உதவிய வீரர் ஒருவருடைய கைக்கடிகாரம் ஏலத்தில் ஒரு கோடிக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | மெட்ரோவில் நிரம்பி வழிந்த கூட்டம்.. மனைவியுடன் செல்பி எடுக்க போராடிய கணவர்.. வைரலாகும் கியூட் வீடியோ..!

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் ஆதிக்கம் அதிகரித்திருந்த நேரம். ஜெர்மானிய படைகளால்  கைது செய்யப்பட்ட எதிரி நாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களை அடைத்துவைக்க பிரம்மாண்ட முகாம்கள் அமைக்கப்பட்டன. இதற்கு உள்ளே சென்ற பெரும்பான்மையானவர்கள் கொலை செய்யப்படுவர் என்பதாலேயே ஜெர்மானிய படைகளிடம் சிக்காமல் இருக்க பல்வேறு தந்திரங்களை போர்வீரர்கள் மேற்கொண்டுவந்தனர். ஆனாலும், இங்கிலாந்தை சேர்ந்த சில வீரர்கள் ஜெர்மன் படையிடம் சிக்கியதுண்டு. அப்படியானவர்களில் ஒருவர்தான் ஜெரால்டு இமேசன்.

சிறைவாசம்

பெர்லினின் தென் கிழக்கே அமைந்துள்ள Stalag Luft III என்னும் முகாமில் இங்கிலாந்தை சேர்ந்த வீரர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். இமேசனும் அதில் ஒருவர். இந்நிலையில் இந்த சிறையில் இருந்து 1944 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டிஷ் வீரர்கள் தப்பிச்சென்றனர். இந்நிகழ்வு வரலாற்றில் கிரேட் எஸ்கேப் என்று நினைவுகூரப்படுகிறது. இதில் ஜெர்மானிய வீரர்கள் ரோந்து செல்லும் நேரம், வீரர்கள் ஓய்வெடுக்கும் நேரம் ஆகியவற்றை இமேசனின் கடிகாரத்தின் துணைகொண்டு அறிந்திருக்கிறார்கள் பிரிட்டிஷ் படை வீரர்கள்.

அந்த சிறையில் இருந்து தப்பிச்செல்ல இமேசன் முடிவெடுத்தும், அவரால் முடியாமல் போயிருக்கிறது. ஆனால், அவரது கைக்கடிகாரம் மூலமாக போட்ட திட்டத்தின் அடிப்படையில் 76 வீரர்கள் சிறையிலிருந்து தப்பிச்சென்றனர். ஹிட்லர் வீழ்ந்த பிறகு, அந்த முகாமை ரஷ்யா கைப்பற்றியது. அப்போது அதாவது 1945 ஆம் ஆண்டு இமேசன் விடுவிக்கப்பட்டார்.

கைக்கடிகாரம்

புகழ்பெற்ற கிரேட் எஸ்கேப் திட்டத்திற்கு பயன்பட்ட இமேசனின் ரோலெக்ஸ் வாட்ச் ஏலத்திற்கு வருவதாக சமீபத்தில் அறிவித்திருந்தது பிரபல ஏல நிறுவனமான கிறிஸ்டி. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஏலத்தில் இந்த வாட்சை ஒருவர் 189,000 டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் 1.47 கோடி ரூபாய்) வாங்கியுள்ளார். 

1945 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையடைந்த இமேசன் 2003 ஆம் ஆண்டு தனது 85 வது வயதில் காலமானார். அதுவரையில் அவர் இந்த வாட்ச்சை பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | எல்லாரும் கட்டுக்கதைன்னு நினைச்சாங்க.. 650 வருஷத்துக்கு முன்னாடி கடலுக்குள் மூழ்கிப்போன பிரம்மாண்ட நகரம்.. தானாகவே மேலே வந்த அதிசயம்?..!

ROLEX WATCH, PRISONER, WWII, கைக்கடிகாரம், ரோலெக்ஸ் வாட்ச்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்