சாலையில் கொட்டிய பண மழை.. தப்பிக்க முடியாதுன்னு திருடர்கள் செஞ்ச காரியம்.. உலக வைரல் வீடியோ..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சிலி நாட்டில் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க, கொள்ளையடித்த பணத்தை சாலையில் வீசியிருக்கிறார்கள் திருடர்கள். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "இதை பார்த்ததுல இருந்து சிரிப்பை அடக்கமுடியல..வா ராஜா வா".. சியான் விக்ரம் பகிர்ந்த வீடியோ..!

தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ளது புடாஹுவேல் மாகாணம். இங்கே கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கொள்ளை கும்பல் கேளிக்கை விடுதி ஒன்றுக்குள் நுழைந்திருக்கிறது. அப்போது, அங்கிருந்த பணத்தை அந்த கும்பல் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியிருக்கிறது கும்பல். இதனிடையே இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து களத்தில் இறங்கிய காவல் துறையினர் கொள்ளையரின் காரை துரத்தியுள்ளனர்.

அப்போது, புடாஹுவேல் மாகாணத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளையர்கள் காரை ஓட்டியிருக்கின்றனர். இதனிடையே காவல்துறையினர் கொள்ளையர்களின் காரை துரத்தவே, என்ன செய்வது என்று தெரியாமல் தங்களிடம் இருந்த பணத்தினை சாலையில் வீசியிருக்கிறது அந்த கும்பல். அப்போது சுமார் 10 மில்லியன் பெஸோக்களை திருடர்கள் சாலையில் வீசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் அதிர்ந்துபோன அதிகாரிகள், விடாமல் துரத்திச் சென்று அந்த கொள்ளையர்களின் காரை மடக்கிப் பிடித்திருக்கின்றனர். இது தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், சாலையில் வீசப்பட்ட பணத்தினை போலீசார் சேகரித்து உள்ளனர். இருப்பினும், அப்போது வீசிய காற்றால் பணம் பறந்து அப்பகுதி முழுவதும் நிறைய, அங்கே நின்றுகொண்டிருந்தவர்களும் பணத்தினை எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

இதுபற்றி பேசியுள்ள அதிகாரிகள், புடாஹுவேல் மாகாணத்தின் வடக்கு கடற்கரை சாலையில் இந்த சேசிங் நடைபெற்றதாகவும், இந்த வழக்கு சம்பந்தமாக இதுவரையில் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். திருடர்கள் பயன்படுத்திய காரும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஹாலிவுட் படங்களை போன்ற இந்த நிகழ்வு அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாக, இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | 1947 முதல் இந்திய தலைவர்கள் குறித்து இருந்த கருத்து ... ஆனா இப்போ.. ஆனந்த் மஹிந்திரா போட்ட தரமான ட்வீட்..

ROBBERS, MONEY, HIGHWAY, CHILE, ROBBERS MAKE MONEY RAIN DOWN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்