பிரிட்டனை ஆளப் போகும் இந்திய வம்சாவளி.. உலகமே உற்று நோக்கும் யார் இந்த ரிஷி சுனக்??..
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவி ஏற்க உள்ளார்.
கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி, பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவி ஏற்றிருந்தார். அப்போது அங்கு நிலவிய பொருளாதார பிரச்சனைகள் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் லிஸ் ட்ரஸ் அறிவித்திருந்தார். இதனை மன்னர் சார்லஸிடமும் அவர் அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, கட்சி தலைவர் போட்டியில் இருந்து பென்னி மோர்டவுன்ட் பின் வாங்கியதன் பின்னர் ரிஷி சுனக் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். கடந்த 7 மாதங்களில், பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ள மூன்றாவது பிரதமர் ரிஷி சுனக் ஆவார். இந்த நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரிட்டன் வரலாற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவி ஏற்க இருப்பதும் இது தான் முதல் முறை. ரிஷி சுனக்கின் தாத்தா பாட்டி, பஞ்சாப் பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள். முதலில் ஆப்பிரிக்காவில் இருந்தவர்கள், பின்னர் பிரிட்டனுக்கு குடி பெயர்ந்தனர். அங்கே சவுதாம்ப்டன் நகரில் தான் ரிஷி பிறந்தார். அவரது பெற்றோரும் அங்கே பணிபுரிந்து வந்தனர். இதனால், பிறப்பிலேயே அவர் இங்கிலாந்து குடிமகன் ஆனார். அதே வேளையில், ஹிந்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட தனது பூர்வீக மொழிகளையும் சிறு வயதில் இருந்தே கற்றுக் கொண்டு வந்துள்ளார் ரிஷி சுனக்.
அது மட்டுமில்லாமல், இந்திய கலாச்சாரத்தையும் பின்பற்றி வந்த ரிஷி சுனக், பகவத் கீதையின் மீது சத்தியப் பிரமாணம் செய்து எம்பி ஆகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவின் பிரபல தொழிலதிபரான 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தியின் மகளான அக்ஷதாவை ரிஷி சுனக் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
அரசியலில் மெல்ல மெல்ல முன்னேறி நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக், நடுவே நிறைய விமர்சனங்கள் உள்ளிட்டவற்றையும் சந்தித்திருந்தார். தொடர்ந்து, பிரதமர் தேர்தலிலும் ரிஷி சுனக் களமிறங்கி இருந்த நிலையில், அதில் தோல்வி அடைந்திருந்தார். பின்னர் தற்போது லிஸ் ட்ரஸ் பதவி விலகவே, பிரிட்டனின் புதிய பிரதமராகும் வாய்ப்பும் ரிஷி சுனக்கிற்கு கிடைத்துள்ளது.
Also Read | AR Rahman : "தாய் மண்ணே வணக்கம்".. பிரதமர் மோடியின் வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்.!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பிரிட்டன் பிரதமர் தேர்தல்.. வெளியானது வாக்கு எண்ணிக்கை முடிவுகள்.. முழு விபரம்.!
- சூடுபிடிக்கும் பிரிட்டன் பிரதமர் தேர்தல்.. மனைவியுடன் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரிஷி சுனக்.. வைரல் புகைப்படம்..!
- பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்தல்.. கரெக்ட்-ஆன Time ல ஆனந்த் மஹிந்திரா ஷேர் செஞ்ச மீம்.. வைரல் ட்வீட்..!
- பிரிட்டன் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பு.. இறுதிச் சுற்றில் இந்தியரான ரிஷி சுனக்.. அடுத்தது என்ன?
- பிரிட்டன் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பு.. இந்தியரான ரிஷி சுனக் 3-வது சுற்றிலும் வெற்றி.. முழு விபரம்..!
- இந்திய வம்சாவளி எம்.பி இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் ஆக வாய்ப்பு..!
- 'அமேசான் வரி மோசடி சர்ச்சை'... 'அடிபடும் இஃன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் பெயர்'... என்னதான் பிரச்சனை?