ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் ஆனதற்கு.. ஆஷிஷ் நெஹ்ராவை வாழ்த்தும் ரசிகர்கள்.. "ஆஹா, இதுனால தான் இப்டி பண்றாங்களா?"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவி ஏற்க உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | பிரிட்டனை ஆளப் போகும் இந்திய வம்சாவளி.. உலகமே உற்று நோக்கும் யார் இந்த ரிஷி சுனக்??..

கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி, பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவி ஏற்றிருந்தார். அப்போது அங்கு நிலவிய பொருளாதார பிரச்சனைகள் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் லிஸ் ட்ரஸ் அறிவித்திருந்தார். இதனை மன்னர் சார்லஸிடமும் அவர் அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, கட்சி தலைவர் போட்டியில் இருந்து பென்னி மோர்டவுன்ட் பின் வாங்கியதன் பின்னர் ரிஷி சுனக் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். கடந்த 7 மாதங்களில், பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ள மூன்றாவது பிரதமர் ரிஷி சுனக் ஆவார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர், பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில், பலரும் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரிட்டன் வரலாற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவி ஏற்க இருப்பதும் இது தான் முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரை குறிப்பிட்டு ரிஷி சுனக்குடன் நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ரிஷியை வாழ்த்துவதற்கு பதிலாக, நெட்டிசன்கள் பலரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ராவின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கு மிக முக்கிய காரணம், ரிஷி சுனக் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோரின் தோற்றம் பார்ப்பதற்கு ஒரே போல இருப்பதால் தான். இதனை குறிப்பிட்டு பகிரப்பட்ட சமூக வலைத்தள பதிவுகள், ஒரு சில மணி நேரங்களில் வைரல் ஆகவும் தொடங்கி இருந்தது.

மேலும், சக வீரர்கள் மற்றும் இந்திய பிரபலங்களுடன் நெஹ்ரா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, பிரிட்டன் பிரதமருக்கு வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். இப்படி பல விதமான கண்டென்ட்டுகளை ரிஷி சுனக் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோருடன் தொடர்பு படுத்தி இணையவாசிகள் பகிர்ந்து வரும் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Also Read | திருட வந்த வீட்டில்.. சொகுசா இருந்த திருடன்.. இரண்டு நாள் கழிச்சு.. அதே வீட்டில் நடந்த துயரம்.. பூஜை அறையில் திக் திக்!!

RISHI SUNAK, BRITAIN PRIME MINISTER, BRITAIN PRIME MINISTER RISHI SUNAK, ASHISH NEHRA, ரிஷி சுனக், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்