'நானும் தமிழன் தான்!'.. 'என் பூர்வீகம் கடலூர்!'.. இங்கிலாந்து பில்லியனர் ரிச்சர்ட் பிரான்சன் பரபரப்பு கருத்து!.. DNA ஆய்வில் உறுதி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவரும், தற்போது விண்வெளி சுற்றுலா சென்றிருப்பவருமான ரிச்சர்ட் பிரான்சனின் மூதாதையர்கள் தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்தவர்கள் என்ற வியக்கவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

'நானும் தமிழன் தான்!'.. 'என் பூர்வீகம் கடலூர்!'.. இங்கிலாந்து பில்லியனர் ரிச்சர்ட் பிரான்சன் பரபரப்பு கருத்து!.. DNA ஆய்வில் உறுதி!!

விண்வெளி சுற்றுலா குறித்து பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த வரலாறு படைக்கப்பட்டுள்ளது. Virgin Group தலைவரும் உலகின் பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவருமான இங்கிலாந்தின் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 11 பேர் இன்று அவருடைய Virgin Galactic விண்வெளி நிறுவனத்தின் VSS Unity விண்வெளி ஓடம் மூலமாக நேற்று நியூ மெக்சிகோவில் இருந்து விண்வெளிக்கு பயணத்தை தொடங்கினார்கள்.

2000ம் ஆண்டு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தான் முதலில் விண்வெளி நிறுவனத்தை தொடங்கினார். மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வது அவருடைய கனவாக இருந்தது. இந்த கனவை அவருடைய புளூ ஆரிஜின் நிறுவனம் மூலமாக நிறைவேற்ற இருக்கிறார். ஜூலை 20ம் தேதி ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம் செல்ல இருக்கிறார். எனினும், பெசோஸுக்கு பின்னர் 2004ம் ஆண்டு விண்வெளி நிறுவனத்தை தொடங்கிய ரிச்சர்ட் பிரான்சன் இன்றைய பயணத்தின் மூலம் விண்வெளி பந்தயத்தில் முந்தியிருக்கிறார்.

புதிய வரலாறு படைக்க இருக்கும் இங்கிலாந்தின் பெரும் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சனுக்கும் தமிழகத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் என்று அவரே ஒரு சுவாரஸ்ய தகவலையும் வெளியிட்டிருக்கிறார்.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில், மும்பைக்கு வருகை தந்த ரிச்சர்ட் பிரான்சன், அவருடைய Virgin Atlantic நிறுவனத்தின் சார்பில் மும்பையிலிருந்து, லண்டனுக்கு நேரடி விமான சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், டி.என்.ஏ சோதனையின் மூலம் தன்னுடைய மூதாதையர்கள் தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்தவர்கள் என அறிந்து கொண்டதாகக் கூறினார்.

"எனது முந்தைய தலைமுறையினர் இந்தியாவில் வாழ்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், எங்கள் தொடர்புகள் எவ்வளவு வலிமையானவை என்பதை உணரவில்லை. 1793 ஆம் ஆண்டு முதல், எங்களது நான்கு தலைமுறைகள் இங்கு கடலூரில் வாழ்ந்திருக்கின்றனர். என் பெரிய, பெரிய, பெரிய பாட்டிகளில் ஒருவரான ஆரியா என்ற இந்திய பெண், என் பெரிய, பெரிய, பெரிய தாத்தாக்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்,

உமிழ்நீர் மற்றும் டி.என்.ஏ பரிசோதனைகளின் மூலம் இந்த உண்மை எனக்கு தெரியவந்தது" என அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்